இந்திய எல்லையை கண்காணிக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மிரட்டலான டிரோன்! பெயர் என்ன தெரியுமா?

|

இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரோனை வடிவமைத்து உள்நாட்டிலேயே உருவாகியுள்ளது. இந்த புதிய டிரோன் இந்தியாவின் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்

இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (DRDO) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது புதிய டிரோன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சிறப்பு டிரோனிற்கு பாரத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இராணுவ யுஏவி வாகன பிரிவில் இந்த புதிய பாரத் டிரோன் சேர்க்கப்பட்டுள்ளது .

புதிய பாரத் டிரோன்

சண்டிகரைச் சேர்ந்த டிஆர்டிஓவின் ஆய்வகத்தில் இந்த புதிய பாரத் டிரோன் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் செயல்படும் கண்காணிப்பு டிரோன்களின் வகையில் இந்த பாரத் டிரோன் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக உள்ளத்திலேயே இந்த பாதுகாப்பு கண்காணிப்பு டிரோன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கஷ்டம் இருக்காது.!ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கஷ்டம் இருக்காது.!

பயோமெட்ரிக் வடிவமைப்பு

எதிரிகளின் ரேடாரில் சிக்கிக்கொள்ளாமல் எளிதாகத் தப்பிக்கக்கூடிய விதத்தில் இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் தோற்றம் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த டிரோனாகவும், எந்த இடத்திலும் தன்னியக்துடன் துல்லியமாகச் செயல்படும் விதத்தில் யுனிபாடி பயோமெட்ரிக் வடிவமைப்பு உடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகம், அதிக கண்காணிப்பு

அதிக வேகம், அதிக கண்காணிப்பு திறன் என்று பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் இந்த டிரோன் உருவாக்கப்பட்டுள்ளது. எதிரிகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு திறனும் இந்த டிரோனிற்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லையில் நிலவும் கடுமையான குளிரைச் சமாளிக்கும் விதத்தில், கண்காணிப்பு உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

இரவு நேரத்தில் தெளிவான காட்சி

எல்லையில் நிகழும் அனைத்து காட்சிகளையும் இந்த டிரோன் நேரலை காண்பிக்கிறது. மேலும் மனிதர்கள் எங்கேயும் பதுங்கி இருந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காணும்படி சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தெளிவான காட்சி அம்சத்தை வழங்க நைட் விஷன் அம்சமும் இதில் உள்ளது. இனி இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி யாரும் நுழைந்தால் நிச்சயம் இந்த டிரோன் நமக்குத் தெரியப்படுத்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Made-In-India Drone To Monitor Chinese Aggression Along The LAC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X