Home
News

Google நெத்தியடி.. 8 வருடம் கழித்து Apple-க்கு முன்பாக அறிமுகம்.. நான்கு புது Pixel 9 போன்கள்.. என்ன மாடல்?

கூகுள் (Google) நிறுவனம் அதன் மேட் பை கூகுள் நிகழ்வை ஆகஸ்ட் 13, 2024 (நாளை) நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் கூகிள் நிறுவனம் தனது முக்கிய ஹார்டுவேர் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேட் பை கூகுள் நிகழ்வில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூகுள் நிறுவனம் மொத்தம் 4 புதிய அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கூகுள் பிக்சல் 9 சீரிஸ் வரிசையில், கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9), கூகிள் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9 Pro), கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 9 ஃ போல்ட் (Google Pixel 9 Fold) ஆகிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google நெத்தியடி.. 8 வருடம் கழித்து Apple-க்கு முன்பாக அறிமுகம்..

கூகுள் பிக்சல் 9 சீரிஸ் அறிமுகம் (Google Pixel 9 Series Launch):

இத்துடன் கூடுதலாக இந்நிகழ்வில், கூகுள் பிக்சல் வாட்ச் 3 (Google Pixel Watch 3) மற்றும் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 (Google Pixel Buds Pro 2) போன்ற சாதனங்களையும் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் ஆப்பிளின் ஐபோன் வெளியீட்டிற்கு முன்பு கூகிள் அதன் பிக்சல் வெளியீட்டை ஹோஸ்ட் செய்வதால் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

ஆம் மக்களே, ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு பிறகு, கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக நிகழ்விற்கு முன்பாக அதன் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக, கூகிள் நிறுவனம் அதன் பிக்சல் தொடரை அக்டோபர் தொடக்கத்தில் ஆப்பிளின் அட்டவணையைப் பின்பற்றி அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.

ஆனால், இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் வெளியாவதற்கு முன்பாக சந்தையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த கூகுள் இந்த முறை முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. நாளை வெளியாகவிருக்கும் கூகுள் பிக்சல் 9 தொடர் ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களின் விபரம் இதோ. கூகுள் பிக்சல் 9 ஆனது 6.3'' இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இது அதன் முன்னோடியின் அதே கேமரா அமைப்பைத் தக்கவைத்து, பளபளப்பான கண்ணாடி வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. புதிய டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதன் விலை €899 ஆகவும், அமெரிக்காவில் $599 முதல் $799 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கூகுள் பிக்சல் 9 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல் ஆனது 16GB RAM உடன் டென்சர் G4 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 9 ப்ரோ மாடலில் 4,558mAh பேட்டரி இருக்கலாம், அதே சமயம் ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 4,942mAh பேட்டரி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பிக்சல் 9 ப்ரோவின் விலைகள் 128ஜிபி மாடலுக்கு £1,099 என்றும், 256ஜிபி மாடலுக்கு £1,199 மற்றும் 512ஜிபி மாடலுக்கு £1,329 இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Made by Google Event Launch On August 13 2024 Google Pixel 9 Pixel 9 Pro Pixel 9 Fold Launch Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X