Made By Google Event 2024: ஒரே மேடையில் 4 புதிய போன்கள்.. Pixel 9, 9 Pro XL, 9 Pro Fold-ன் இந்திய விலை என்ன?
கூகுள் (Google) நிறுவனத்திற்கு இன்று, அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாகும். ஏனென்றால் இன்று இரவு தான் மேட் பை கூகுள் 2024 நிகழ்வு (Made by Google 2024 Event) நடக்க உள்ளது. ஒரே மேடையில் 4 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் உட்பட மேட் பை கூகுள் நிகழ்வில் பல ஆச்சரியங்கள் மற்றும் அறிவிப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக இந்நிகழ்வில் என்னென்ன அறிமுகங்கள் நடக்கும்? இந்திய நேரப்படி இந்நிகழ்வு எப்போது தொடங்கும்? இதை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
மேட் பை கூகுள் 2024 நிகழ்வில் என்னென்ன புதிய அறிமுகங்கள் இருக்கும்? கூகுள் நிறுவனம் ஏராளமான புதிய டிவைஸ்களை அறிமுகம் செய்யவுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, கூகுள் பிக்சல் 9 சீரீஸின் கீழ் மொத்தம் 4 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது: பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold).

புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து கூகுள் நிறுவனமானது பிக்சல் வாட்ச் 3 (Pixel Watch 3), பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 (Pixel Buds Pro 2) மாடல்களும் அறிமுகம் செய்யப்படவுள்ள. கூடவே ஜெமினி ஏஐ-க்கான (Gemini AI) புதிய அப்டேட் அல்லது புதிய ஏஐ அம்சங்கள், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ன் பப்ளிக் ரிலீஸ் (Android 15 OS Public Release) போன்ற முக்கிய அறிவிப்புகளும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட் பை கூகுள் 2024 நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? மேட் பை கூகுள் 2024 நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தலைமையகம் ஆன மவுண்டன் வியூவில் (Mountain View) நடக்கிறது. இந்திய நேரடி இது ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிகழ்வு கூகுளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் (Google YouTube Channel) மற்றும் இணையதளம் (Google Website) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். ஆனால் 4 மாடல்களில் இதெல்லாம் இந்தியாவிற்கு வரும் என்பதில் சிறிய குழப்பம் நிலவுகிறது. ஏனென்றால் கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செல்லர் ஆன பிளிப்கார்ட் வலைதளமானது பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை 'லைவ்' ஆக்கியுள்ளது.
அந்த டீஸரில் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகிய 2 மாடல்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ மாடல்கள் இந்தியாவிற்கு வராது என்கிற என்ணத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் அல்ல. வெறும் யூகம் மட்டுமே ஆகும். 4 மாடல்களுமே கூட இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக இருக்கும். ஏனெனில் இந்நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஆன பிக்சல் ஃபோல்ட் இந்தியாவிற்கு வரவில்லை.
இந்தியாவில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.1,50,600 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல் ஆனது சுமார் ரூ .1,01,00 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ப்ரோ வேரியண்ட் ஆன பிக்சல் 9 ப்ரோவானது ரூ.84,000 க்கும், வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 9 ஆனது ரூ.75,500 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








