Home
News

சுந்தர் சம்பவம் லோடிங்.. 5 முக்கிய அறிவிப்புகள்.. மொத்த உலகமும் உற்று நோக்கும் Made by Google Event 2024!

2024 ஆகஸ்ட் மாதத்தின் மிகவும் முக்கியமான வெளியீட்டு நிகழ்வானது ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. அது மேட் பை கூகுள் ஈவென்ட் 2024 (Made By Google Event 2024) ஆகும். கூகுள் நிறுவனத்தின் இந்த வெளியீட்டு நிகழ்வில் கூகுள் பிக்சல் 9 சீரீஸ் (Google Pixel 9 Series) ஸ்மார்ட்போன்கள் உட்பட மொத்தம் 5 முக்கிய அறிமுகங்கள் / அறிவிப்புகள் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக மேட் பை கூகுள் நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்? என்னென்ன முக்கிய அறிவிப்புகள் நடக்கும்? இதோ விவரங்கள்:

1. பிக்சல் 9 சீரீஸ் (Pixel 9 Series): கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 9 சீரிஸின் கீழ் வழக்கமான பிக்சல் 9 (Pixel 9) மற்றும் பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro) ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்றும்; இது இந்தியாவிலும் வாங்க கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உலகமும் உற்று நோக்கும் Made by Google Event 2024!

பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆனது கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது புக் ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது சதுர வடிவிலான டூயல் ஷேப்டு கேமரா ஐலேண்ட்டை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கூகுளின் இந்த லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 9 சீரீஸ் உடன் தொடங்கப்படுமா அல்லது சில வாரங்களுக்குப் பிறகு அறிமுகம் செய்யப்படுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

2. ஆண்ட்ராய்டு 15 பப்ளிக் ரிலீஸ் (Android 15 public release): பிக்சல் 9 சீரிஸுடன் சேர்த்து, உலகின் மிகவும் பிரபலமான மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டமின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆன ஆண்ட்ராய்டு 15-ன் பப்ளிக் ரிலீஸும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று நடக்கும் மேட் பை கூகுள் நிகழ்வில் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 15 அப்டேட் ஆனது பல புதிய அம்சங்களை கொண்டு வருவதாக கூறப்படுகிறது, அவற்றில் சில ஏஐ-பவர்டு மற்றும் சில புதிய ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி அம்சங்களும் அடக்கம். இந்த ஆண்டு நடந்த கூகுள் ஐ/ஓ நிகழ்வின் ஹைலைட் ஆன "தெப்ட் டிடெக்ஷன் லாக் (Theft Detection Lock) அம்சமும் ஆண்ட்ராய்டு 15 பப்ளிக் ரிலீஸில் இடம்பெறலாம்.

3. புதிய ஏஐ அம்சங்கள்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான சர்க்கிள் டு சர்ச் போன்ற சில பழைய ஏஐ அம்சங்கள் பல ஸ்மார்ட்போன்களுக்கு வரும் என்று கூகுள் உறுதி செய்துள்ளது ஒருபக்கம் இருக்க "ஆட் மீ" போன்ற சில ஏஐ அம்சங்களும் பலருக்கும் வந்து சேரும்படியான அறிவிப்பு நிகழ்த்தப்படலாம். ஆட் மீ என்பது க்ரூப் புகைப்படங்கள் மற்றும் பிக்சல் ஸ்கிரீன்ஷாட்களில் வெவ்வேறு நபர்களை சேர்க்க அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இதுதவிர்த்து ஜெமினியின் சில மேம்பாடுகளும் அறிவிக்கப்படலாம்.

4. பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 (Pixel Buds Pro 2): கூகுள் நிறுவனம் அதன் ஒரிஜினல் பிக்சல் பட்ஸ் ப்ரோவை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் கூகுளின் இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது பெரிதும் கவனிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில், கூகுள் பல அப்டேட்களை வெளியிட்டு இதை பிரபலப்படுத்தியது. அந்த வரிசையில் வரும் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2மாடலும் கூட நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. பிக்சல் வாட்ச் 3 (Pixel Watch 3): ஒரிஜினல் பிக்சல் வாட்ச் மற்றும் கடந்த ஆண்டு வெளியான பிக்சல் வாட்ச் 2 ஆகிய இரண்டுமே இந்தியாவிற்கு வரவில்லை. ஆனால் கூகுள் அதன் திட்டங்களை மாற்றி பிக்சல் வாட்ச் 3 மாடலை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் வாட்ச் 3 ஆனது இரண்டு அளவுகளில் வரும் என்று கூறப்படுகிறது - 41 மிமீ மற்றும் 45 மிமீ.

More from GizBot

Best Mobiles in India

English summary
Made by Google Event 2024 New AI Features Pixel 9 Series Android 15 Public Release What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X