ஐஃபோன் மற்றும் ஐபாட் சாதனங்களில் மதன் கார்க்கி!

Posted By: Karthikeyan
ஐஃபோன் மற்றும் ஐபாட் சாதனங்களில் மதன் கார்க்கி!

பாடலாசிரியருக்காக என்றே ஒரு செயலி (apps) வடிவைமக்கப் பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த வசதியைப் பெற்றிருப்பவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

ஐஃபோன் மற்றும் ஐபாட் சாதனங்கள் பயன்படுத்துவோர் இனி கார்க்கியின் இந்த செயலியை இலவசமாக தரவிரக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இரும்பிலே ஓர் இருதயம், என்னமோ ஏதோ, அஸ்கு லஸ்கா, அழைப்பாயா போன்ற பாடல்களை எழுதியுள்ளவர் கார்க்கி. இந்த செயலியில் இவரின் பாடல்கள் ஆங்கில ஒலியாக்கம் மற்றும் மொழியாக்கத்துடன் கிடைக்கும்.

பிரபல மொழி பெயர்ப்பாளர் ரேக்ஸ் மற்றும் நந்தினி கார்க்கி இந்த செயலியில் இடம் பெற்றிருக்கும் பாடல்களை கவித்துவம் மாறாமல் மொழியாக்கம் செய்துள்ளனர்.

கார்க்கியின் புகைப் படங்கள் அடங்கிய மின் காட்சியகம் ஒன்றும், பாடல்கள் பற்றி அனைவரும் கலந்தாலோசிக்கும் இணைய அறை ஒன்றும், ட்விட்டர் மூலம் கார்க்கியுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வசதியும் இந்தச் செயலியின் மற்ற சிறப்பம்சங்களாகும்.

அமெரிக்காவில் உள்ள தாக்ஷா என்ற நிறுவனம் இந்த செயலியை இந்த மாதம் அறிமுகப்படுத்தி உள்ளனர். கார்க்கியின் புத்தம் புதிய தமிழ் வரிகளை மின் சாதனங்கள் பயன்படுத்தும் இந்த தலைமுறையினர் கைகளுக்கு மொழியாக்கத்துடன் எடுத்துச் செல்லும் என்று தாக்ஷா கருதுகிறது.

வெளியான சில நாட்களில் பெரும் வரவேற்பை இந்த செயலி பெற்றிருப்பதால், ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் இந்த செயலியை விரைவில் அறிமுகப்படுத்த தாக்ஷா குழு முயன்று வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்