ஆப்பிள் மேக்புக் மீது சலுகை: வெறும் ரூ.61,890 விலையில் மேக்புக் வாங்குவது எப்படித் தெரியுமா?

|

ஆப்பிள் தயாரிப்புகளுக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆப்பிள் ஐபோன்கள் மீது எப்படி ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களோ, அதேபோல், ஆப்பிள் மேக்புக் மீதும் ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. மற்ற நிறுவனங்களின் லேப்டாப்களை விட ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் சாதனங்கள் அதிக சக்தி வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது என்பதனால் மக்கள் இதன் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றனர். உங்களுக்கும் மேக்புக் சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இது தான் மிகச் சரியான நேரம்.

MacBook Air M1 லேப்டாப் மீது சலுகை

MacBook Air M1 லேப்டாப் மீது சலுகை

ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 (MacBook Air M1) சாதனத்தின் மீது இப்போது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சக்திவாய்ந்த மேக்புக் லேப்டாப்பைப் பெறுவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தாலோ அல்லது உங்களிடம் பட்ஜெட் சிக்கல் இருப்பதால் அதைச் செய்ய முடியாமல் போயிருந்தாலோ இந்த வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள், மிகவும் குறைந்த விலையில் ஒரு புதிய MacBook Air M1 சந்தானத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்பு இதோ.

அசல் விலையில் இருந்து ரூ. 8,000 தள்ளுபடியா?

அசல் விலையில் இருந்து ரூ. 8,000 தள்ளுபடியா?

ஆப்பிள் தொடக்க நிலை மேக்புக் ஏர் எம்1 லேப்டாப் சாதனம் ரூ. 92,900 விலைக்கு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி SSD சேமிப்பகத்துடன் வெளியிடப்பட்டது. இப்போது இந்தியாவில் இது ரூ. 84,990 என்ற விலைக்கு கிடைக்கிறது. இது தற்போது Flipkart இல் அதன் அசல் விலையில் இருந்து ரூ. 8,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது மட்டுமின்றி, பயனர்கள் தங்கள் பழைய லேப்டாப்களில் ஒன்றை மாற்ற முடிவு செய்தால் ரூ. 23,100 வரை கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். இந்த எக்ஸ்சேன்ஜ் சலுகை எல்லா லேப்டாப்களுக்கும் நிலையானது அல்ல.

IRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைIRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

எக்ஸ்சேஞ் சலுகையை எப்படி சரியாக பெறுவது?

எக்ஸ்சேஞ் சலுகையை எப்படி சரியாக பெறுவது?

பரிமாற்ற விலை நிலையானது அல்ல என்பதற்கான அர்த்தம், இது உங்கள் தற்போதைய மடிக்கணினியின் நிலையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும். பொருட்படுத்தாமல், உங்கள் பழைய மடிக்கணினியை மாற்ற வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால், புதிய MacBook Air M1 சாதனத்தை ரூ. 8,000 தள்ளுபடியில் பெறலாம். இது மோசமான ஒப்பந்தம் அல்ல. இதனுடன், Flipkart Axis Bank கார்டி வாடிக்கையாளர்களுக்கு 5% வரம்பற்ற கேஷ்பேக் நன்மையும் கிடைக்கிறது.

MacBook Air M1 2022 இல் கூட வாங்குவது மிகவும் நல்லதா என்ன காரணம்?

MacBook Air M1 2022 இல் கூட வாங்குவது மிகவும் நல்லதா என்ன காரணம்?

ஆப்பிள் நிறுவனத்தின் MacBook Air M1 சாதனமானது M1 செயலியுடன் கூடிய மேக்புக் ஏர் சீரிஸ் வரிசையில் கடந்த 2020 இல் தொடங்கப்பட்டது. இப்போது, இது மிகவும் பழையதாக இருந்தாலும், மடிக்கணினி செயல்திறனைப் பொறுத்தவரை இது சிறந்ததாகும். இது அதன் வரம்பில் உள்ள ஒவ்வொரு மடிக்கணினியையும் வெல்ல முடியும் மற்றும் தடையற்ற மேக் அனுபவத்தை வழங்குகிறது. M2 செயலியுடன் கூடிய மேக்புக் ஏர் 2022 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ வழங்கும் ஜியோ வழங்கும் "டேட்டா லோன்" பெறுவது எப்படி? இது எப்படி செயல்படும் தெரியுமா?

புதிய MacBook Air M2 வாங்கலாம்.. விருப்பம் உங்களுடையது

புதிய MacBook Air M2 வாங்கலாம்.. விருப்பம் உங்களுடையது

எனவே, நீங்கள் இன்னும் காத்திருக்க முடிந்தால், MacBook Air M2 ஐ முயற்சிக்கவும். MacBook Air M2 உங்கள் பட்ஜெட்டில் அதிகமாக இருக்கும் என்று நினைத்தாள், நீங்கள் MacBook Air M1 உடன் செல்லலாம். ஒருவேளை, MacBook Air M2 வருகையுடன், MacBook Air M1 இன் விலை மேலும் குறையும். நீங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற உள்ளூர் டீலர்களிடம் சென்றால், நீங்கள் MacBook A1 M1 உடன் இன்னும் சில தள்ளுபடியைப் பெறலாம். மேலும் வெவ்வேறு டீலர்கள் வெவ்வேறு கார்டு சலுகைகளை வழங்குகிறார்கள்.

Best Mobiles in India

English summary
MacBook Air M1 Available For Rs 61890 With Exchange And Other Offers On Flipkart : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X