பழைய mAadhaar கதை முடிந்தது.. ஜூலை 1 முதல் ரூ.75 கட்டணமில்லாமல் புது Aadhaar ஆப் மட்டும்.. என்னென்ன மாறுது?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது எம்ஆதார் (mAadhaar) ஆப்பின் சேவைகளை ஜூன் 30ஆம் தேதியுடன் நிறுத்துகிறது. ஆகவே, ஜூலை 1ஆம் தேதி முதல் புது ஆதார் ஆப் (New Aadhaar App) மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். ரூ.75 கட்டமில்லா ஈமெயில் அப்டேடுடன் கிடைக்க இருக்கிறது.
ஆதார் ஆப் சேவைகளுக்காக எம்ஆதார் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. பல வருடங்களாக சேவைகளை கொடுத்துவந்தது. இந்த ஆப்புக்கு மாற்றாக பேஸ் ஆதன்டிகேஷனுடன் புதிய ஆதார் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update), முகவரி அப்டேட் (Address Update) சேவைகள் இதில் சேர்க்கப்பட்டன.

மொபைல் நம்பர் அப்டேட் செய்ய முன்பு, ஆதார் சென்டர் செல்ல வேண்டி இருந்தது. இதை வீட்டில் இருந்தே செய்யும்படி ஆதார் ஆப்பில் வசதி கொடுக்கப்பட்டது. இதற்கு கட்டணமாக ரூ.75 இருக்கிறது. ஆதார் சென்டரிலும் ரூ.75 கட்டணம் செலுத்தியே மொபைல் நம்பர் அப்டேட் செய்ய வேண்டும். ஈமெயில் அப்டேட் (Email Update) செய்யவும் ரூ.75 கட்டணம் இருக்கிறது.
ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய ஆதார் ஆப் வழியாக ஈமெயில் அப்டேட் செய்தால், ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. பழைய எம்ஆதார் ஆப்பின் ஆப்பின் சேவை முழுமையாக நிறுத்தப்படுவதால், ஆதார் வைத்திருப்பவர்களை புதிய ஆதார் ஆப்புக்கு மாற்ற இந்த ரூ.75 கட்டணமில்லா ஈமெயில் அப்டேட் கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த சேவை ஜூலை 1ஆம் தேதியில் இருந்து மட்டுமே தொடங்கும். டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். ஆகவே, அதற்கு மேல் ஈமெயில் அப்டேட் செய்தால் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 6 மாதங்களுக்கு இந்த கட்டணமில்லா ஈமெயில் அப்டேட் சேவை கொடுக்கப்பட இருக்கிறது.
ஆதார் சென்டர் மற்றும் ஆதார் இணைய தளங்களில் ஈமெயில் அப்டேட் செய்தால், ரூ.75 கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஆதார் ஆப் வழியாக ஈமெயில் அப்டேட் செய்தால் எந்தவித கட்டணமும் இருக்காது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த சேவை கிடைக்க இருப்பதால், இப்போது ஆதார் ஆப்பில் இந்த சேவை தோன்றாது.
அதாவது, ஆதார் ஆப்பை ஓப்பன் செய்து, சேவைகள் விருப்பத்தின் கீழ் சென்றால், மொபைல் நம்பர் அப்டேட் மற்றும் முகவரி அப்டேட் செய்ய மட்டுமே இடம்பெற்று இருக்கும். ஈமெயில் அப்டேட் விருப்பம் இருக்காது. இதனால், அந்த சேவை கிடைக்காது என்று நினைக்க வேண்டாம். ஜூலை 1ஆம் தேதி முதல் மட்டுமே அது தோன்றும்.
பழைய எம்ஆதார் ஆப்புக்கு விடை கொடுத்த கையோடு இந்த சேவையை தொடங்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது முடிவெடுத்துள்ளது. இதனாலேயே ஜூலை 1ஆம் தேதி முதல் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆதார் ஆப் மொபைல் நம்பர், ஈமெயில், முகவரி அப்டேட்களை மட்டும் கொடுக்காமல், பல்வேறு சேவைகளை கொடுக்கிறது.
கியூஆர் கோட் வழியாக ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பகிரப்படும் ஆதாரில் என்னென்ன தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மொபைல் நம்பர், ஈமெயில், முகவரி உள்ளிட்டவற்றை மறைத்தும் அனுப்ப முடியும். ஆதார் சென்டருக்கு செல்ல குறிப்பிட்ட நாளில் புக்கிங் செய்யலாம்.
ஆதார் கார்டு கையில் இல்லாத நேரத்தில், ஈஆதார் டவுன்லோட் செய்ய முடியும். ஏற்கனவே, பேஸ் ஆதன்டிகேஷன், பின் நம்பர் கொடுத்து ஓப்பன் செய்யப்பட்டு இருப்பதால், எந்தவித தாமதமும் இல்லாமல், நொடியில் ஈஆதாரை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு சேவைகளுடன் ஆதார் ஆப் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications