SONY-க்கு ஆப்பு.. குறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜிங்.. 70 மணிநேர பிளே டைம் TWS.. என்ன மாடல் என்ன விலை?
ஆடியோ இயர்பட்ஸ் தயாரிப்பில் பெஸ்ட் என்றாலே சோனியை தான் எல்லோரும் சொல்வார்கள், இந்த பெயரை முறியடிக்க இப்போது ஹெட்போன் ஜோன் (Headphone Zone) மற்றும் லைப்பர்டெக் (Lypertek) நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
முதல் முறையாக ஹெட்போன் ஜோன் (Headphone Zone) மற்றும் லைப்பர்டெக் (Lypertek) ஆகிய இரண்டு நிறுவனங்கள் கைகோர்த்து புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளன. இதை நிறுவனம் லைப்பர்டெக் X ஹெட்போன் ஜோன் பியூர்பிளே Z3 TWS இயர்பட்ஸ் (Lypertek X Headphone PurePlay Z3 True Wireless Earbuds) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

இந்த TWS இயர்பட்ஸ் சாதனத்தை இந்திய சந்தைக்கு பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ளது ஹெட்போன் ஜோன் பிராண்ட். ஹெட்ஃபோன் ஜோன் இன் 13 ஆண்டுகால வரலாற்றில் ஹெட்ஃபோன் ஜோன் பெயர் மற்றும் லோகோ எந்த ஹெட்ஃபோன், இயர்ஃபோன்ஸ் அல்லது TWS வயர்லெஸ் இயர்பட்கஸ்ளிலும் கூட இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்பர்டெக் X ஹெட்போன் ஜோன் பியூர்பிளே Z3 TWS இயர்பட்ஸ் (Lypertek X Headphone PurePlay Z3 True Wireless Earbuds):
முதல் முறையாக, இப்போது தான் பெயர் மற்றும் லோகோ இடம்பெறுள்ளது. இந்த பியூர்பிளே Z3 (PurePlay Z3) ஆனது மிகவும் வெயிட்லெஸ் ஆன எடையுடன், TWS வயர்லெஸ் வடிவமைப்பில் துல்லியமான மற்றும் கச்சிதமான ஒலிக்கான கிராபெனின் டிரைவர்களை கொண்ட இயர்பட்ஸ் ஆக இது வருகிறது. இது கச்சிதமான காது பொறுத்தத்துடன் வருகிறது.
இது பல்வேறு செயல்பாடுகளுடன் பாதுகாப்பான பொருத்தத்திற்கு இடையே வெளிப்புற சத்தம் மற்றும் இரைச்சலை தடுக்கிறது. இது குவால்காம் (Qualcomm) இன் QCC3040 சிப்செட் மற்றும் புளூடூத் 5.2 (Bluetooth 5.2) உடன் பொருத்தப்பட்டிருக்கும். Lypertek X Headphone PurePlay Z3 தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது, Qualcomm இன் aptX மற்றும் AAC கோடெக்குகளை ஆதரிக்கிறது.

intha இயர்பட்ஸ்கள் நிலையான நிலைமைகளின் கீழ் 10 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் மூலம் கூடுதலாக 70 மணிநேரம் வழங்கப்படுகிறது. 2 மணிநேரம் பிளேபேக் நேரத்துக்கு USB டைப் C போர்ட் வழியாக 15 நிமிட பிஸ்ட் சார்ஜ் அம்சம் வழங்குகிறது. இந்த இயர்பட்கள் Qi சார்ஜிங் பயன்படுத்தி வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.
இது தெளிவான வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு, இயர்பட்கள் குவால்காமின் தெளிவான குரல் கேப்சர் (CVC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. இது எடிஷன் 8.0 உடன் பின்னணி இரைச்சல் மற்றும் எதிரொலியை நீக்குகிறது. இது IPX7 மதிப்பீடு பெற்ற வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது.
லைப்பர்டெக் X ஹெட்போன் ஜோன் பியூர்பிளே Z3 TWS இயர்பட்ஸ் (Lypertek X Headphone PurePlay Z3 True Wireless Earbuds) சாதனம் விலை ரூ. 5,999 என்ற விலையில் வருகிறது. இது இன்று முதல் ஹெட்ஃபோன் ஜோன் ஆன்லைன் ஸ்டோரில் பிரத்தியேகமாக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த விலையில் வயர்லெஸ் சார்ஜிங், 70 மணிநேர பிளே டைம் உடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சோனிக்கு போட்டியாக வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








