ரூ.899 விலையில் ஆட்டம் ஆரம்பம்.. இது பொம்மை கார் இல்லை பாஸு.. ப்ளூடூத் ஸ்பீக்கரு.. எந்த Speaker மாடல்?
ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth speaker) வாங்க திட்டமிட்டவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக லைன் நிறுவனம் தற்போது புதிதாக லைன் ஜுக்பாக்ஸ் 4 ப்ரோ (Lyne JukeBox 4 Pro) என்ற கார் வடிவ ஸ்டீரியோ ஸ்பீக்கர் (stereo speaker) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலில் பார்த்தவுடன் இதை எதோ ஒரு பொம்மை கார் (Toy car) என்று நினைத்தவர்கள் எல்லாம், இப்போது இதுவொரு ப்ளூடூத் ஸ்டீரியோ டைப் ஸ்பீக்கர் (Bluetooth stereo speaker) என்று தெரிந்தவுடன், ஆஹா ஸ்பீக்கர் சாதனமா இது? அருமையா இருக்கே, இதன் விலை என்னவாக இருக்கும்?
என்பது போன்ற கேள்வியை இப்போதே நீங்கள் கேட்க துவங்கிவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். பார்ப்பவர்களின் ஆர்வத்தை அடுத்த நொடியே தூண்டும் இந்த புதிய Lyne JukeBox 4 Pro Speaker டிவைஸின் விலை மற்றும் முழு விபரங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். லைன் (Lyne) நிறுவனம் இன்று அதன் ஜுக்பாக்ஸ் ஸ்பீக்கர் சீரிஸ் வரிசையின் கீழ், நான்கு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.899 விலையில் ஆட்டம் ஆரம்பம்.. இது பொம்மை கார் இல்லை பாஸு.. ப்ளூடூத் ஸ்பீக்கரு:
லைன் (Lyne) நிறுவனம் அதன் புதிய பிரீமியம் ஸ்பீக்கர் சாதனம் மற்றும் கேமிங் ஹெட்செட் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, பிரீமியம் ஸ்பீக்கர் வரிசையின் கீழ், லைன் நிறுவனம் புதிதாக லைன் ஜுக்பாக்ஸ் 2 ப்ரோ (Lyne JukeBox 2 Pro), லைன் ஜுக்பாக்ஸ் 4 ப்ரோ (Lyne JukeBox 4 Pro), லைன் ஜுக்பாக்ஸ் 21 ஸ்பீக்கர்ஸ் (Lyne JukeBox 21 speakers) ஆகீஐ மூன்று சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
அதேபோல், இந்த நிறுவனம் அதன் ஹெட்செட் வரிசையின் கீழ் புதிதாக லைன் ஹைட்ரொ 5 கேமிங் ஹெட்செட் (Lyne Hydro 5 Gaming Headset) சாதனத்தையும் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு சாதனங்களும் மிரட்டலான பல அம்சங்களுடன் புதுமையான வடிவமைப்பை பெற்றிருந்தன என்றாலும் கூட, லைன் ஜுக்பாக்ஸ் 4 ப்ரோ ஸ்பீக்கர் சாதனம் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
லைன் ஜுக்பாக்ஸ் 4 ப்ரோ ஸ்பீக்கர் (Lyne JukeBox 4 Pro Speaker):
காரணம், இந்த புதிய லைன் ஜுக்பாக்ஸ் 4 ப்ரோ ஸ்பீக்கர் (Lyne JukeBox 4 Pro Speaker) சாதனம் கார் போன்ற வடிவத்துடன், அதன் பின்பக்கத்தில் கண்ட்ரோல் ஸ்விட்ச் (control switch) மற்றும் கனெக்டிவிட்டி போர்ட் (connectivity port) ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் சாதனம் பற்றி பேசுகையில், இது கைக்கு அடக்கமான அளவுடன், மிகவும் தனித்துவமான வடிவமைப்பை பெற்றுள்ளது.
இந்த Lyne JukeBox 4 Pro ஸ்பீக்கர் சாதனம் 6W சவுண்ட் அவுட்புட் ஆதரவை கொண்டுள்ளது. இது ஆர்ஜிபி லைட் உடன் கூடுதல் ஈர்ப்பை வழங்குகிறது. இந்த சாதனம் TWS ஸ்பீக்கர் சாதனமாக வருகிறது. இது ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (True Wireless Stereo speaker) சாதனமாக இருந்தாலும், இது மற்ற ஜுக்பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் இணைந்து டைனமிக் ஸ்டீரியோ சவுண்ட் (dynamic stereo sound) அனுபவத்தை வழங்கும் மல்டி பேரிங் (multi paring) அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லைன் ஜுக்பாக்ஸ் 4 ப்ரோ ஸ்பீக்கர் விலை (Lyne JukeBox 4 Pro Speaker Price):
இந்த லைன் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Lyne Bluetooth Speaker) சாதனம் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி அம்சத்துடன் இயங்குகிறது. இதில் டைப்-C சார்ஜிங் போர்ட் (Type-C charging port) உடன் வால்யூம் கண்ட்ரோல், பவர் பட்டன் போன்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களை கொண்டுள்ளது. இது 6 மணி நேரம் நீடித்து நிலைக்கும் பிளேடைம் நேரத்தை (6 hours playback time) வழங்குகிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், Lyne JukeBox 4 Pro ஸ்பீக்கர் சாதனம் வெறும் ரூ. 899 என்ற விலையில் (Lyne JukeBox 4 Pro Price) வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர் தற்போது பிளாக் (Black), ப்ளூ (Blue), க்ரீன் (Green) மற்றும் கோல்டுக்கு (Gold) நிறங்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








