பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நாடலின் ஆடம்பர கைக்கடிகாரம்: விலை என்ன தெரியுமா? என்ன சிறப்பு?
நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஞாயிற்றுக்கிழமை கோவிட் -19 பரவலுக்கு மத்தியில் தொடங்கியது. எனினும் பிரெஞ்சு ஓபன் எனப்படும் களிமண் தரையின் நாயகன் ரபேல் நடால், "தயவுசெய்து புதிய பந்துகள் வேண்டாம்" என்று கூறினார்.

அதாவதுரோலண்ட் கரோஸில் நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் புதிதாக வில்சன் பந்து எனப்படும் புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டொமினிக் தீம் மற்றும் நோவக் ஜோகோவிச் போன்றோர் இந்த புதிய வகை பந்துகள் "கனமாகவும், மெதுவாகவும்' இருக்கின்றன எனக் கூறியுள்ளனர். ஆனால் 12 முறை பிரெஞ்சு ஓபன் கோப்பை வென்ற நடால், இந்த பந்துகள் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
வானிலை நிலைமைகளுடன் இணைந்து, வில்சன் பந்துகள் இந்த சாம்பியனுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

புதிய வில்சன் பந்துகள் மெதுவாகவும், "களிமண்ணில் விளையாடுவதற்கு நல்லதல்ல". ஆனால் யுஎஸ் ஓபன் சாம்பியனாக புதிதாக முடிசூட்டப்பட்ட டொமினிக் தீம் கால நிலைமைகளை விட பந்து "பெரிய வித்தியாசமாக" இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், "நான் வீட்டில் பந்தை வைத்து இரண்டு நாட்கள் பயிற்சி செய்தேன். அதனால் நான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் பாபோலாட் பந்துகள் உண்மையில் எனக்கு பிடித்த பந்துகள். அவை நன்றாகவும் வேகமாகவும் இருந்தன. எனது விளையாட்டுக்கு ஏற்றவை,
நடாலின் விளையாட்டுக்கும் ஏற்றது. புதிய பந்துகள் மெதுவாக இருக்கின்றன. விளையாட தொடங்கிய சிறிது நேரத்திற்குப் பிறகு அவை கொஞ்சம் பெரிதாகின்றன. அது நிச்சயமாக முடிவுகளை கொஞ்சம் மாற்றிவிடும்" எனக் கூறியுள்ளார்.

குறிப்பாக புகழ்பெற்ற வீரர்கள் விலை மதிப்புள்ள பொருட்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆடம்பரமான கார்கள். ஷூக்கள், கைக்கடிகாரங்கள் எனப் பட்டியல் நீளமானது. அந்தவகையில் பரெஞ்சு ஓப்பன் போட்டியில் விளையாடும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அணிந்திருக்கும் புதிய கைக்கடிகார்ததின் விலை 7,65கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்த கைக்கடிகாரத்தின் எடை 30கிராம் என்று கூறப்படுகிறது. ஆனால் விலையோ 1,050,000டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.7,69கோடி. ஆனால் இந்த வகை கடிகாரங்கள் 50மட்டுமே தயாரிக்கப்பட்ட லிமிடெட் எடிஷன், அவரது கடிகாரம் தண்ணீரில் மிதக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு இந்த கைக்கடிகாரத்தின் வடிவமைப்பு நடாலின் மணிக்கட்டில் வாழ்க்கையின் நம்பமுடியாத சக்திகளைத் தாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது ஆடம்பர கைக்கடிகாரங்களுக்காக ரஃபேல் நடால், சுவிஸ் பிராண்ட் ரிச்சர்ட்டு மல்லேயுடன்
கூட்டு சேர்ந்திருந்தார்.

தற்சமயம் நடாலின் இந்த ஆடம்பர கைக்கடிகாரம் தொடர்பாக ஒரு விவாதமே சமூக வலைதளங்களில் நடந்துவருகிறது. பின்பு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications