லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

|

லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் 4 வாட்ஸ் சக்தியுடன், 45 மிமீ டைனமிக் டிரைவருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை இதோ!

லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கரை லுமிஃபோர்ட் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் லுமிஃபோர்ட்.காம் மற்றும் அமேசான் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.2199 ஆக இருக்கிறது.

உயர் பேஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், அழைப்பு வசதிக்கு உள்ளமைக்கப்பட்ட எச்டி மைக், கூகுள் அசிஸ்டென்ட்/சிரி ஆதரவு, சிறிய அளவிலான கூடுதல் உரத்த ஸ்டீரியோ ஒலி அனுபவத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு ஸ்பீக்கர்களை இணைக்கக்கூடிய டிடபிள்யூஎஸ் இணைப்பை கொண்டுள்ளது.

லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறிய அளவில் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 4 வாட் கோமியூசிக் பிடி12 45 மிமீ டைனமிக் டிரைவர் மற்றும் 20 ஹெர்ட்ஸ் அதிர்வெண் பதில் சக்தி வாய்ந்த ஒலி மற்றும் 10மீ வலுவான டிரான்ஸ்மிஷன் ஆகியவையை கொண்டுள்ளது.

இந்த ஸ்பீக்கர் ஐபிஎக்ஸ் 4 வாட்டர் ரெசிஸ்டென்ட் மற்றும் ப்ளூ, கருப்பு, சிவப்பு ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஸ்பீக்கர் 900 எம்ஏஎச் அயன் பேட்டரியில் இயங்குகிறது. இது 2 மணிநேர சார்ஜிங் செய்வதன் மூலம் 8 மணிநேர ப்ளேபேக் நேரம், பேச்சு ஆகிய வசதிகளை வழங்குகிறது. யூஎஸ்பி ப்ளே, மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் எஃப்எம் ரேடியோ சப்போர்ட் ஆகிய பல இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது.

லுமிஃபோர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஜித் பட்டாச்சார்ஜி இதன் வெளியீடு குறித்து கூறுகையில், கோமியூசிக் பிடி12 ப்ளூடூத் ஸ்பீக்கர் புதிய வயது நுகர்வோர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இசை அவர்களை போலவே வேகமாக இருக்கும். எங்கள் தயாரிப்பு வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் அவர்களது இசையை கையோடு எடுத்துச் செல்லும் சுதந்திரத்தை வழங்குகிறது. உயர் பேஸ், உயர்தர ஒலி மற்றும் பெரிய பேட்டரி திறன்களை கொண்டுள்ளது என கூறினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lumiford Launched its Lumiford GoMusic BT12 Bluetooth Speaker: Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X