உசுரு முக்கியம் மக்களே: மூச்சுவிட சிரமமா?- நோயாளிகளுக்கு தாமாக சிகிச்சை அளிக்கும் புதிய ரோபோ!

|

மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதிய ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோபோ இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லூகாஸ் 3 என இந்த ரோபோவுக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் பிளாஸ்டிக் தட்டு வடிவமைப்பு முதுகுப்புறத்தில் பொருத்தப்பட்டு மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.

மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகள்

மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகள்

நோயாளிகள் மூச்சுவிட சிரமப்படும் போது அவர்களின் வயது, எந்தளவு மூச்சுவிட சிரமப்படுகிறார்கள் என்பதை கணக்கில் கொண்டு ரோபோவில் இருக்கும் ரப்பர் பை போன்ற வடிவமைப்பு நெஞ்சை அழுத்திக் கொடுக்கும். பொதுவாக ஒருவர் மூச்சுவிட சிரமப்படும் போது நெஞ்சை அழுத்திக் கொடுப்பது வழக்கம்., இதையே இந்த ரோபோ நோயாளிகளின் வயது, மூச்சுவிட சிரமப்படும் அளவை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உதவியின்றி முதற்கட்டமாக சிபிஆர் எனப்படும் செய்முறையை செய்யலாம். மேலும் இந்த கருவி சோதனை கட்டமாக ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்பட்ட இந்த கருவி வெற்றிகரமாக செயல்பட்டதையடுத்து இது இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு பயன்பாடுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அவசர நேரங்களில் ரோபோ சிகிச்சை

அவசர நேரங்களில் ரோபோ சிகிச்சை

இது மருத்துவ சுமைகளை குறைக்க உதவுகிறது. அதேசமயத்தில் அவசர நேரங்களில் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கான பிற முக்கிய சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. லூகாஸ் 3 எனப்படும் இந்த ரோபோ., நோயாளிகளுக்கு சிபிஆர் சிகிச்சை செய்ய அனுமதிக்கிறது. நோயாளிகளுக்கு ஏழு வினாடிகளில் இந்த ரோபோவை பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

சிபிஆர் சிகிச்சை

சிபிஆர் சிகிச்சை

இருதய கோளாறு நேரங்களில் உயர் தரமான மற்றும் தடையற்ற மார்பு அழுத்தத்தை வழங்குவதற்கான முக்கிய தீர்மானத்தை இது வழங்குகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை செய்யும்போது சோர்வடைவார்கள் இது சிகிச்சை தரத்தை பாதிக்கும். எனவே நோயாளிகளுக்கு இந்த தரம் உடைய தகுந்த சிகிச்சை வழங்க இந்த ரோபோ அனுமதிக்கிறது.

துல்லியமான சிபிஆர் சிகிச்சை

துல்லியமான சிபிஆர் சிகிச்சை

ஆம்புலன்ஸ் வேகமாக செல்லும்போது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிபிஆர் சிகிச்சையை கட்டுப்பாடு உடன் வழங்க முடியாது, மேலும் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். எனவே இந்த ரோபோ ஆம்புலன்ஸ்களில் பெரிதளவு பயனுள்ளதாக இருக்கிறது. லூகாஸ் 3 சாதனம் தொய்வில்லாத தரமான சிகிச்சையை வழங்குகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனா தொற்று மூன்றாம் அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கூட்டம் கூட்டமாக பொதுவெளியில் மக்கள்

கூட்டம் கூட்டமாக பொதுவெளியில் மக்கள்

தமிழகத்தை பொறுத்தவரை 24 மணிநேரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கிற்கு முன்பான நாளில் அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் சென்னையில் இருந்து பிற நகரங்களில் இருந்தும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது, இதனால் மக்கள் கூட்டமாக கூட்டமாக பொதுவெளியில் தென்பட்டனர்.

தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள்., தங்களது பணிக்கால அனுபவம், அறிவு, திறமை என அனைத்தையும் பயன்படுத்தி கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில் மக்கள் தேவையான காய்கறிகள், பழ வகைகள், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மேலும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மிகவும் அரிதாக உண்டாகும் இந்த தொற்று பாதிப்பானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஆயிரக் கணக்கானோருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று வருவதாக கூறப்படுகிறது எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Lucas 3 Robot Can Save Lives by Giving CPR Treatment to Patients

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X