Just In
- 15 hrs ago
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 16 hrs ago
குறைந்த விலையில் இன்று மட்டும் தான் சலுகை.. உடனே ஆர்டர் செய்யுங்கள்.. அட்டகாச Tecno போன்கள்..
- 16 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி சி30: என்னென்ன அம்சங்கள்?
- 17 hrs ago
IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?
Don't Miss
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- News
இப்படி பண்றாங்களே! சென்னை வரும் மோடியிடம்.. பற்ற வைக்கபோகும் கமலாலயம்.. தப்பு தப்பு! சிக்கலில் திமுக
- Finance
மறுபடியும் ஏறப்போகிறதா பெட்ரோல் விலை? விலை இறங்கிடுச்சுன்னு சந்தோஷப்பட வேண்டாம்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Movies
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..
LPG வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இந்திய அரசு எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு ரூ. 79.26 முதல் ரூ. 237.78 வரை அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், இந்த சிலிண்டர் மானியம் பெரும்பாலும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இப்படி இவர்களைப் போல் உங்களுக்கும் எல்பிஜி சிலிண்டர் வாங்கிய மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், இதற்குப் பின்னணியில் சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறது.

எல்பிஜி சிலிண்டர் மானியத் தொகை வாங்குவதில் சிக்கலா?
அந்த காரணங்கள் என்ன என்பதுடன், இவற்றை எப்படிச் சரி செய்து உங்களுக்கான மணியத் தொகையைப் பெறலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். எல்பிஜி சிலிண்டர் வாங்கிய மானியத் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கவலைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஏன் எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியத்தைப் பெறவில்லை என்பதைச் சரிபார்க்க சில எளிய வழிகள் உள்ளது.

சிக்கலை சரி செய்து வங்கி கணக்கில் LPG மானியத் தொகையை திரும்பப்பெற வேண்டுமா?
இதைச் சரி செய்து மீண்டும் எல்பிஜி சிலிண்டருக்கான மானியத்தைப் பெறவும் சில வழிகள் உள்ளது. அந்த வழிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். இதைப் பின்பற்றுவதற்கு உங்களுடைய வங்கி கணக்கு எண், எல்பிஜி சிலிண்டர் கணக்கிற்கான எண், ஆதார் எண் போன்ற தகவல்கள் உங்கள் கையில் இருப்பது அவசியம். சரி, இப்போது இந்த சிக்கலை எப்படிச் சமாளிப்பது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு ஏன் எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லை?
உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லை என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முதலில், நீங்கள் சரியான வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிடாமல் இருக்கலாம். நீங்கள் எல்பிஜி மானியத்தைப் பெறுகிறீர்களா இல்லையா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து, ஆன்லைன் வழியின் மூலமாகவும் உங்கள் மானியத் தொகை பற்றிய விபரங்களை அறியலாம்.

சிலிண்டர் மானியம் கிடைக்காததற்கு இது கூட முக்கிய காரணங்களில் ஒன்றா?
- உங்கள் LPG ஐடி உங்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்படாதது மற்ற முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
- உங்கள் அருகிலுள்ள எல்பிஜி வினியோகஸ்தரிடம் உங்கள் பிரச்சனையைத் தெரிவித்து, அதைச் சரி செய்து கொடுக்க விண்ணப்பிக்கலாம்.
- இது தவிர, இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொண்டும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
- இதுமட்டுமின்றி இன்னும் சில காரணங்களால் கூட, உங்கள் எல்பிஜி சிலிண்டருக்கான மானியத் தொகை உங்களுக்கு வந்து சேராமல் இருக்கலாம்.
- இதற்கு உங்கள் ஆதார் எண் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
- உங்கள் ஆதார் எண் சரியாக உங்கள் எல்பிஜி கணக்கு எண்ணுடன் இணைக்கப்படாததும் மானியத் தொகை கிடைக்காமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
- இன்னும் சில முக்கியமான காரணங்களில் ஒன்று என்றால், உங்களுடைய ஆண்டு வருமானம் அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு மேல் சென்றிருந்தாலும் உங்களுக்கு எல்பிஜி மானியத் தொகை கிடைக்காமல் இருக்க வாய்ப்புள்ளது.
- அரசின் உத்தரவின் படி, ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த மானியத் தொகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கும். இவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
- முதலில் http://mylpg.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லுங்கள்.
- இங்கு உங்களுடைய LPG ஐடியை உள்ளிட்டு லாகின் செய்யுங்கள்.
- அடுத்தபடியாக நீங்கள் எந்த நிறுவனத்தின் LPG ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உள்ளிட வேண்டும்.
- அந்த நிறுவனத்தின் அடிப்படையாகக் கொண்டு தேவையான தகவல்களை வழங்க வேண்டும்.
- உங்கள் 17 இலக்க LPG ஐடியை உள்ளிட்டு மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.
- இப்போது இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை அப்படியே உள்ளிட வேண்டும்.
- பின்னர் Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பின், உங்கள் எல்பிஜி கணக்குடன் இணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல்லான OTP எண் வந்தடையும்.
- சரியான OTP எண்ணை உள்ளிடவும்.
- இப்போது, நீங்கள் உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
- உங்களின் கடவுச்சொல்லை உள்ளிட்டதும், உங்கள் மின்னஞ்சல் ஐடியில் ஒரு இணைப்பைப் பெறுவீர்கள்.
- உங்கள் மின்னஞ்சலுக்குச் சென்ற பிறகு, அந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது mylpg.in கணக்கில் உள்நுழைந்து, பாப் அப் செய்தியில் உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
- இப்போது சிலிண்டர் முன்பதிவு வரலாறு / மானியம் பரிமாற்றம் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆங்கிலத்தில் Cylinder Booking History / Subsidy Transfer என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
- இந்த செயல்முறையைப் பின்பற்றி உங்கள் மானியத் தொகையின் முழு விபரத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஆதார் எண்ணிற்கும் சிலிண்டர் மானியத்திற்கும் தொடர்பு உள்ளதா?

யாரெல்லாம் இந்த சிலிண்டர் மானியத்திற்கு தகுதியானவர்கள்?
சூரியனை தொட்ட நாசா பார்க்கர் பிரோப் ஏன் இன்னும் உருக்கவில்லை தெரியுமா? உண்மை காரணம் இது தான்..

உங்கள் எல்பிஜி மானியத்தின் நிலையை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்க்கலாம்?

மொபைல் எண்.. OTP மற்றும் மின்னஞ்சல் முக்கியமா?
உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..

முன்பதிவு வரலாறு / மானியத் தகவல் பற்றி அறிந்துகொள்ள இதை செய்யுங்கள்

இந்த சிக்கல்களில் ஏதேனும் ஒரு சிக்கல் இருந்தாலும் சிலிண்டர் மானியம் கிடைக்காதா?
இந்த சிக்கல்களில் ஏதேனும் ஒரு சிக்கல் உங்களின் எல்பிஜி கணக்குடன் தொடர்பில் இருந்தால், நிச்சயமாக உங்களின் எல்பிஜி சிலிண்டரின் மானியத் தொகை கிடைக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. இதை உடனே சரி செய்து, உங்கள் கணக்கிற்குக் கிடைக்கும் சரியான மானியத் தொகையைப் பெற்று, அதைத் தடை இல்லாமல் தொடர்ச் செய்யுங்கள். சிலிண்டர் மானியம் சரியாக கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் நபர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்திடுங்கள்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999