புது LPG கேஸ் விதிகள்.. ஜூன் 30-க்குள் இதை செய்யாவிட்டால் கனெக்சன் கட்.. 2 கனெக்சன் இருந்தா இதை தெரிஞ்சிகோங்க!
இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) தட்டுப்பாட்டை சீர்செய்யும் பொருட்டு, மத்திய அரசு கேஸ் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. இனிமேல் ஒரே வீட்டில் இரண்டு கேஸ் இணைப்புகளை (Gas Connections) வைத்திருக்க முடியாது என்ற அதிரடி உத்தரவு வந்துள்ளது.
ஒரு வீட்டிற்கு ஒரு கேஸ் கனெக்சன் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், உங்களிடம் எல்பிஜி (LPG) மற்றும் பிஎன்ஜி (PNG) இணைப்பு இருந்தால் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நீங்கள் செய்ய வேண்டிய கட்டாய வழிமுறைகள் இதோ. தற்போது சமையல் பயன்பாட்டிற்கு சிலிண்டர் (LPG) மற்றும் குழாய் வழி கேஸ் (PNG - Piped Natural Gas) என இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரே வீட்டில் இரண்டு இணைப்புகள்:
ஒரே முகவரியில் வசிப்பவர்கள், குழாய் வழி (PNG) கேஸ் இணைப்பையும் வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் மானிய விலையிலான எல்பிஜி சிலிண்டரையும் பெற்று வந்தால், அது விதிகளுக்குப் புறம்பானதாகும். ஜூன் 30-ஆம் தேதிக்குள் நுகர்வோரே முன்வந்து ஏதேனும் ஒரு இணைப்பை ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அரசு தரப்பில் இருந்து இரண்டு இணைப்புகளுமே ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஆன்லைனில் கேஸ் இணைப்பை சரண்டர் (Surrender) செய்வது எப்படி?
உங்களிடம் இரண்டு கனெக்சன்கள் இருந்தால், அபராதம் அல்லது இணைப்பு ரத்து நடவடிக்கையைத் தவிர்க்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனிலேயே ஒன்றை ஒப்படைக்கலாம்.
1. எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ஒப்படைக்க:
படி 1: நீங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தின் (Indane, Bharat Gas, அல்லது HP Gas) அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் அல்லது இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: உங்கள் கணக்கில் லாகின் செய்து, 'Surrender Connection' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
படி 3: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், எல்பிஜி ஐடி (LPG ID) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு, ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பை முடித்து இணைப்பை ஒப்படைக்கலாம்.
2. குழாய் வழி பிஎன்ஜி (PNG) இணைப்பை ஒப்படைக்க:
பிஎன்ஜி நுகர்வோருக்காக மத்திய அரசு 'National PNG Drive 2.0' திட்டத்தின் கீழ் 'MYPNGD' என்ற பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் நுகர்வோர் எண் (Consumer Number) ஆகியவற்றை உள்ளிட்டு, குழாய் வழி இணைப்பைத் துண்டிப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
நுகர்வோர்கள் கவனிக்க வேண்டிய கூடுதல் கேஸ் விதிகள் (Additional LPG Rules): கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களும் தங்களது ஆதார் கார்டு மூலம் பயோமெட்ரிக் அல்லது இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி இணைப்புகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே பெயரில் பல இணைப்புகள் இருப்பதை கட்டுப்படுத்த வந்துள்ளது. ஒரே நபர் வெவ்வேறு நிறுவனங்களில் (உதாரணமாக இன்டேன் மற்றும் ஹெச்பி) தன் பெயரில் கனெக்சன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக மானியம் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வணிகப் பயன்பாட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வீட்டு உபயோகத்திற்கான மானிய சிலிண்டர்களை ஹோட்டல்கள், டீக்கடைகள் அல்லது வணிக ரீதியான தேவைகளுக்குப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகும். அவ்வாறு செய்தால் சிலிண்டர் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். முகவரி மாற்ற விதிகளும் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு பொருந்து.
நீங்கள் வாடகை வீட்டிற்கு அல்லது புதிய முகவரிக்கு மாறும்போது, முந்தைய ஏஜென்சியிடம் இருந்து டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (Transfer Certificate) பெற்று, புதிய முகவரியை 3 மாதங்களுக்குள் அப்டேட் செய்ய வேண்டும். ஜூன் 30 ஆம் தேதிக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், இரட்டை கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் உடனே ஏதேனும் ஒரு இணைப்பை ஒப்படைக்கவும்.


Click it and Unblock the Notifications