Home
News

இந்த மாத LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வந்துவிட்டதா? உடனே Mobile எடுங்க ஆன்லைனில் செக் பண்ணுங்க..

இந்தியன் கேஸ் (Indane Gas), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் எச்பி கேஸ் (HP Gas) என்று நீங்கள் எந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை (LPG Gas Cylinder) வாங்கினாலும் சரி, இந்த பதிவு உங்களுக்கானது தான். எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு இப்போது ரூ.30 முதல் துவங்கி ரூ.300 வரை அதிகபட்சமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம் (LPG Gas Cylinder Subsidy) வரவு வைக்கப்பட்டு வருகிறது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்குமான மானியத் தொகை உங்கள் கணக்கில் சரியாக வரவு வைக்கப்படுகிறதா என்பதை உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முறைப்படி செக் செய்யுங்கள்.

ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் ஒவ்வொரு விதமான மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவரவர் வருவாயை பொறுத்து, அவர்களின் வங்கி கணக்கில் கேஸ் சிலிண்டர் மானியத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால், யாருக்கு எவ்வளவு மானியத் தொகை ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்ற தெளிவான தகவல் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

இந்த மாத LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வந்துவிட்டதா?

இந்த மாத LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வந்துவிட்டதா?

சிலருக்கு, LPG கேஸ் சிலிண்டர் மானியம் சரியாக கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் உள்ளது. உங்கள் சந்தேகத்தை உடனே சில நிமிடங்களில் சரி செய்துகொள்ள, தற்போது உங்கள் LPG கேஸ் சிலிண்டர் மானிய விபரங்களை உடனுக்குடன் ஆன்லைனில் பார்த்து செக் செய்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி வீட்டில் இருந்தபடி, உங்கள் போன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

நீங்கள் இந்தியன் கேஸ் (Indane Gas), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் எச்பி கேஸ் (HP Gas) என்று எந்த நிறுவனத்தின் LPG கேஸ் சிலிண்டரை பயன்படுத்தினாலும், இந்த செயல்முறையை பின்பற்றி நீங்கள் மானியத் தொகை வரலாற்றை சில நொடியில் செக் செய்துகொள்ளலாம்.

LPG Gas Cylinder மானியத் தொகை வரலாற்றை சில நொடியில் செக் செய்ய இதை பின்பற்றுங்கள்:

- உங்கள் ஸ்மார்ட்போனில் https://www.mylpg.in என்ற இந்த இணையதள பக்கத்தை சர்ச் செய்யவும்.
- டிஸ்பிளேவின் வலதுபுறத்தில் 3 கேஸ் சிலிண்டர்கள் (gas cylinder) காண்பிக்கப்படும்.
- இதில் இந்தியன் கேஸ் (Indane Gas), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் எச்பி கேஸ் (HP Gas) என்று 3 விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
- அதிலிருந்து நீங்கள் வாங்கும் சிலிண்டர் நிறுவனத்தை கிளிக் செய்யவும்.

- கிளிக் செய்தவுடன் நீங்கள் வாங்கும் உரிய சிலிண்டர் நிறுவனத்தின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
- இதற்கு முன்பு இந்த தளத்தில் நீங்கள் சைன் இன் (Sign In) செய்யவில்லை என்றால், கட்டாயம் இப்போது Sign In செயல்முறையை நீங்கள் முதலில் முடிக்க வேண்டும்.
- உங்கள் அடையாள விபரங்களை உள்ளிட்டு பாஸ்வோர்ட் (password) செட் செய்து லாகின் (login) செய்யவும்.

வீட்டில் இருந்தபடி கேஸ் சிலிண்டர் மணியத் தொகை விபரங்களை செக் செய்யுங்கள்:

- உங்கள் மொபைல் நம்பர் விபரங்களை (Mobile number) பதிவிட வேண்டும்.
- உங்கள் போனிற்கு அனுப்பப்படும் OTP விபரங்களை டைப் செய்து அங்கீகரிக்கவும்.
- இப்போது உங்களுக்கு பல விருப்பங்கள் காண்பிக்கப்படும். - டிஸ்பிளேவின் இடதுபுறத்தில் View Cylinder Booking History / Subsidy transferred என்ற விருப்பம் காண்பிக்கப்படும்.
- இந்த விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களுக்கு ஒரு பெரிய பட்டியல் காண்பிக்கப்படும்.

இதில் உங்கள் LPG கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்த வரலாறு மற்றும் அந்த நேரத்தில் நீங்கள் அந்த சிலிண்டருக்காக எவ்வளவு கட்டணம் செலுத்தினீர்கள் என்ற தகவல்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். பிறகு, அந்த சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வரவு வைக்கப்பட்டது? எந்த வங்கி கணக்கில் மானியம் போடப்பட்டது என்பது போன்ற முழு விபரமும் காண்பிக்கப்படும். இப்படி உங்கள் LPG கேஸ் சிலிண்டர் மானியம் சரியாக வரவு வைக்கப்படுகிறதா என்று செக் செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
LPG Gas Cylinder Subsidy For This Month Is Credit or Not Check This Online Method Using Mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X