Home
News

LPG கேஸ் சிலிண்டர் புதிய ரூல்ஸ்.. வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 4 விஷயங்கள்..

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்கள் (LPG Cylinder) கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தக்கவும், பொது மக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய்படுவதையும் உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சில விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பிஎன்ஜி மற்றும் எல்பிஜி விதிகள்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, ஒரே முகவரியில் குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பை ஒன்றாக வைத்திருப்பது இனி அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக PNG இணைப்பு பயன்படுத்தும் குடும்பங்கள், வீட்டு உபயோக LPG சிலிண்டர்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.

LPG கேஸ் சிலிண்டர் புதிய ரூல்ஸ்..

குழாய் எரிவாயு (PNG) இணைப்பு உள்ளவர்கள், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்களை வைத்திருக்கவோ, புதிய ரீஃபில் முன்பதிவு செய்யவோ முடியாது. மேலும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் பிஎன்ஜி வாடிக்கையாளர்கள், தங்களது இணைப்பை உடனடியாக கியாஸ் விநியோக நிறுவனங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

டெலிவரி OTP அவசியம்: நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது DAC எனப்படும் delivery authentication code என்ற டெலிவரி அங்கீகாரக் குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபியாக வரும். அதை சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி-ஐ பகிர்ந்தால் மட்டுமே உங்கள் கைக்கு சிலிண்டர் வரும்.

அதுவும் இது முறையான வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர்கிறது என்பதை உறுதிப்படுத்த கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை ஆகும். ஆகவே சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ்-ஐ சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிலிண்டர் விநியோகத்தின் போது மட்டுமே இந்த ஓடிபி தரப்பட வேண்டும். ஒருவேளை யாரவது போன் கால் அல்லது வாட்ஸ்அப் கால் மூலம் இந்த ஓடிபி கேட்டால் பகிர கூடாது. சிலிண்டர் டெலிவரி செய்யும் சமயத்தில் மட்டுமே இந்த ஓடிபி-ஐ பகிர வேண்டும்.

சிலிண்டர் மானியம்: ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இனி எல்பிஜி சிலிண்டர் மானியம் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை ஆய்வு செய்து அதில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தும் எல்ஜிபி சிலிண்டருக்கான மானியத்தை பெறுவோருக்கு அது ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சிலிண்டர் விநியோக நிறுவனங்களே வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றன.

LPG கேஸ் சிலிண்டர் புதிய ரூல்ஸ்..

ஒரு கட்டத்தில் 300 ரூபாயாக இருந்த மானியம் தற்போது மிகவும் குறைந்த அளவாக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு வருமான அடிப்படையிலான கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த குடும்பத்திற்கு எல்பிஜி மானியம் வழங்கப்படாது என்று தெரிவித்திருந்தது.

சிலிண்டர் புக்கிங் விதிகள்: சமீபத்தில் எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், சிலிண்டர் புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.

Best Mobiles in India

English summary
LPG Cylinder Update: 4 Major Changes in Subsidy and Delivery Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X