LPG Cylinder பற்றாக்குறை.. எகிறியது Induction Stove தேவை.. Online-ல் வாங்க மக்கள் சந்திக்கும் 3 சிக்கல்கள்!
திடீரென இந்தியா முழுவதும் இண்டக்ஷன் குக்டாப்களுக்கான (Induction cooktops).. அதாவது இண்டக்ஷன் ஸ்டவ்களுக்கான (Induction Stove) தேவை அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் - பல நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் (LPG Cylinder) பற்றாக்குறை மற்றும் எல்பிஜி சிலிண்டர் கிடைப்பது குறித்த கவலைகள் தான்!
இதன் விளைவாக, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் - சில நாட்களுக்கு முன்னர் வாங்க கிடைத்த பெரும்பாலான இண்டக்ஷன் குக்டாப்கள் இப்போது கையிருப்பில் (Out of Stock) இல்லாமல் போய்விட்டது. இதை நாங்களே கைமுறையாக சோதித்தும் பார்த்துவிட்டாம். ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் இன்னமும் சில மாடல்கள் வாங்க கிடைக்கிறது.

ஆனால் இதிலும் 3 சிக்கல்கள் உள்ளன. ஒன்று - பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும் மாடல்கள் எப்போது அவுட் ஆப் ஸ்டாக் ஆகுமென்று தெரியவில்லை; எப்போது வேண்டுமானாலும் கையிருப்பில் இல்லாமல் போகலாம். இரண்டாவது - ஸ்டாக்கில் உள்ள பெரும்பாலான மாடல்கள் பெயர் தெரியாத பிராண்டுகளாக உள்ளன; அதாவது பிரபலமான நிறுவனங்களின் இண்டக்ஷன் ஸ்டவ்கள் குறைவாகவே உள்ளன
மூன்றாவது மற்றும் முக்கியமான சிக்கல் - வாங்க கிடைக்கும் மாடல்கள் முன்பை விட சற்றே அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது போல் தெரிகிறது .சரியாக எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்கிற விவரங்கள் இல்லை. ஏனென்றால் அவைகள் (முன்பே குறிப்பிட்டப்படி) பெரிய பிராண்டுகள் அல்ல. ஆகையால் அவைகள் என்ன விலைக்கு வந்தன, இப்போது என்ன விலைக்கு வாங்க கிடைக்கின்றன என்கிற விவரங்கள் இல்லை.
பிடிஐ-யின் படி, டாடா குழுமத்தின் ஒரு பகுதியான மின்னணு சில்லறை விற்பனையாளர் ஆன குரோமா (Croma), இண்டக்ஷன் குக்டாப்களுக்கான தேவையில் மூன்று மடங்கு அதிகரிப்பை சந்தித்துள்ளது. இதேபோல், பிஜியன் மற்றும் கில்மா போன்ற பிராண்டுகளின் கீழ் சமையலறை உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்டோவ்கிராஃப்ட் லிமிடெட், அதன் ஆன்லைன் விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வை அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களிலேயே, இண்டக்ஷன் குக்டாப்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்ததால் தான், இந்த திடீர் ஆன்லைன் பற்றாக்குறை (Online Shortage) ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகேமே வேண்டாம். இந்திய அரசாங்கமானது, வணிக எல்பிஜி முன்பதிவுகளை மட்டுப்படுத்தியுள்ளது மற்றும் உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது, இதனால் பலரும் சமையல் செய்வதற்கான "மாற்று" விருப்பங்களை தேடி வருகின்றனர் - அதில் இண்டக்ஷன் ஸ்டவ் தான் முதலிடத்தில் உள்ளது!
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று அரசாங்கம் உறுதியளிக்கிறது. முன்பதிவு செய்த சுமார் 2.5 நாட்களுக்குள் எல்பிஜி சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மாவின் கூற்றுப்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்றும், நாடு அதன் எண்ணெயில் 70% ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள பாதைகளிலிருந்து பெறப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்க நடவடிக்கைகள் எல்பிஜி உற்பத்தியை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும அமைச்சகம் கூறியுள்ளது.
OPINION: அரசாங்கத்தின் இந்த "உறுதிமொழிகள்" உண்மையிலேயே உறுதியானதாக இருந்தால், இந்திய மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்பி இருந்தால் - ஆன்லைன் தளங்களில் இண்டக்ஷன் குக்டாப்கள் கையிருப்பில் இல்லாமல் போகும் அளவிலான சூழ்நிலை உருவாகி இருக்காது. ஆக உண்மையாகவே பிரச்சினை இருக்கிறதோ இல்லையோ.. மக்கள் மத்தியில் பதட்டத்தை அதிகரித்து வருகிறது என்பது மட்டும் "உறுதி"!


Click it and Unblock the Notifications








