இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

|

வீட்டு தேவைக்காக எல்பிஜி சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டரின் வீட்டு விநியோக முறையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் வரப்போகிறது. இனி எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் நுகர்வோரர் ஓடிபி பாஸ்வோர்ட்டு இல்லாமல் வீட்டு வாசலில் சிலிண்டர்களை பெறமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டர்

எல்பிஜி சிலிண்டர்களின் புதிய ஓடிபி அடிப்படையிலான விநியோகத்தைப் பற்றிய தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் டெலிவரி ஆதென்டிகேஷன் கோடு என்று அழைக்கப்படும் DAC என்ற புதிய முறையைச் செயல்படுத்தியுள்ளது. இது திருட்டைத் தடுக்கவும் சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் இந்த அமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 ஸ்மார்ட் நகரங்களில் டெலிவரி

ஆரம்பத்தில் 100 ஸ்மார்ட் நகரங்களில் டெலிவரி ஆதென்டிகேஷன் கோடு (டிஏசி) செயல்படுத்தப்படும். பைலட் திட்ட சோதனையாக முதலில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இந்த முறை தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் திருட்டைத் தடுக்க, நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். இந்த OTP எண்ணை விநியோக நபரிடம் வாடிக்கையாளர் காண்பித்தல் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

சிலிண்டர் டெலிவரிக்கான OTP

எல்பிஜி சிலிண்டர்களின் நுகர்வோர் எரிவாயு ஏஜென்சியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் மாற்றியிருந்தால் உடனே அதை நேரில் சென்று அப்டேட் செய்யுங்கள். இப்படி செய்யாவிட்டால் உங்கள் சிலிண்டர் டெலிவரிக்கான OTP உங்களுக்குக் கிடைக்காது. இதனால் எல்பிஜி சிலிண்டர்களை விநியோக நபர் உங்களிடம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030 க்குள் உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு எல்பிஜி

சிலிண்டர் ஏஜென்சியில் குறிப்பிடப்பட்டுள்ள உங்களுடைய முகவரி, இப்பொழுது நீங்கள் வசிக்கும் முகவரியிலிருந்து வேறுபட்டிருந்தால், கண்டிப்பாக நீங்கள் அதை உடனே மாற்றியமைக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இந்த டிஏசி முறை வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கு பொருந்தாது. அதேபோல், 2030 க்குள் உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு எல்பிஜி குடியிருப்பு துறை சந்தையாகச் சீனாவை இந்தியா முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
LPG cylinder home delivery rules to change from 1 November : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X