வீட்டு கேஸ் சிலிண்டர் புக்கிங்.. புதிய விதியால் வந்த இடி.. பாரத் கேஸ், HP கேஸ், இண்டேன் டெலிவரி கேன்சலாகும்!
இந்தியாவில் எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas), எச்பி கேஸ் (HP Gas) உள்ளிட்ட அனைத்து முக்கிய கேஸ் நிறுவனங்களும் சிலிண்டர் விநியோக முறையில் புதிய கேஸ் சிலிண்டர் விதிகளை கடைப்பிடித்து வருகின்றன. இதன் முக்கிய அம்சமாக, இனிமேல் ஓடிபி (OTP) அல்லது டிஏசி (DAC) இல்லாமல் சிலிண்டர் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
பிபிசிஎல் (BPCL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation limited) ஆனது இந்த கேஸ் சிலிண்டர் விதிகளை அமல் செய்துள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஓடிபி அனுப்பப்படும்.

இந்த ஓடிபியை சிலிண்டரை வீட்டிற்கு கொண்டு வரும் விநியோக ஊழியரிடம் வழங்கிய பின்னரே சிலிண்டர் ஒப்படைக்கப்படும். இதன் நோக்கம், சிலிண்டர் கள்ளச்சந்தைக்கு செல்லுவதை தடுக்கவும், உண்மையான வாடிக்கையாளரிடமே சிலிண்டர் சென்று சேர்வதை உறுதி செய்யவும் ஆகும். ஆகவே, உங்கள் கேஸ் இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
பழைய அல்லது பயன்படுத்தப்படாத எண்ணாக இருந்தால், அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சென்று புதுப்பித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஓடிபி கிடைக்காமல் சிலிண்டர் விநியோகம் தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஈ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பு முடிக்காத வாடிக்கையாளர்களும் சிக்கலை சந்திக்கக்கூடும் என கேஸ் ஏஜென்சிகள் (Gas Agencies) கூறுகின்றன.
குறிப்பாக உஜ்வாலா (Ujjwala) திட்ட பயனாளர்கள் ஈ-கேஒய்சி முடித்திருப்பது அவசியமாகும். கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புறங்களில் சிலிண்டர் மறுபதிவுக்கான குறைந்தபட்ச இடைவெளி 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஓடிபியை பகிர்வதில் வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கேஸ் விநியோக ஊழியரிடம் மட்டுமே ஓடிபியை கொடுக்க வேண்டும். பான் விவரங்கள் (PAN Details), பேங்க் விவரங்கள் (Bank Details) கேட்கப்பட்டால், கட்டாயம் கொடுக்கக்கூடியாது. இந்த ஓடிபி விதிகள் மட்டுமல்லாமல், ஒரு வீட்டுக்கு ஒரு கேஸ் இணைப்பு விதிகளும் அமலுக்கு வர இருக்கின்றன. ஜூன் 30ஆம் தேதி கடைசி தேதியாக இருக்கிறது.
அதாவது, இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் மட்டுமல்லாமல், பிஎன்ஜி (PNG) என்று அழைக்கப்படும் குழாய் வழி கேஸ் (Piped Natural Gas) இணைப்பும் கொடுக்கப்படுகிறது. இதில் பிஎன்ஜி இணைப்பு (PNG Connection) முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த பிஎன்ஜி வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டரும் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், இது ரத்து செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த பிஎன்ஜி இணைப்பை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் எல்பிஜி இணைப்பு ஒப்படைக்க வேண்டும். பிஎன்ஜி கேஸ் இணைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், எல்பிஜி இணைப்பு துண்டிக்கப்படும் என்று இந்திய அரசு விதிகளை கொண்டுவந்துள்ளது.
ஆகவே, பிஎன்ஜி இணைப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம், ஒருவேளை வரும்காலங்களில் பிஎன்ஜி இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு செல்லும்போது, உடனடியாக எல்ஜிபி சிலிண்டரை பெறுவதற்காக எல்பிஜி டிராஸ்பர் வவுச்சர் (LPG Transfer Voucher) கொடுக்கப்படுகிறது. இதை வாங்கி வைத்து கொள்ளலாம். ஜூன் 30ஆம் தேதியே எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ஒப்படைக்க கடைசி தேதியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications