இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!
இண்டேன் சிலிண்டர்கள் புக் செய்வதற்கான புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இண்டேன் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

சிலிண்டர் புக் செய்வதற்கான புதிய எண்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக் செய்வதில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய நடைமுறையில் இண்டேன் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் மாற்றப்பட்டுள்ளது. இண்டேன் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்வதற்கான புதிய எண் 7718955555 ஆகும்.

இண்டேன் வாடிக்கையாளர்களுக்கான முன்பதிவு
அதுமட்டுமின்றி இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு முன்பதிவு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்வதாகும். இண்டேன் வாடிக்கையாளராக இருந்தால் தற்போது 7718955555 என்ற புதிய எண்ணை அழைத்து சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். அதேபோல் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ் அப் மெசேஜ் செய்வதற்கான புதிய எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ் அப் மூலம் சிலிண்டர் புக்கிங்
இண்டேன் வாடிக்கையாளர்கள் தற்போது 7718955555 என்ற எண் அழைப்பதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். வாட்ஸ் அப் மூலம் சிலிண்டர் புக் செய்வதற்கு 7588888824 என்ற எண்ணை சேவ் செய்ய வேண்டும். பின் வாட்ஸ்அப் மெசேஜில் REFILL என டைப் செய்து 7588888824 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

REFILL என டைப் செய்து மெசேஜ்
REFILL என டைப் செய்து மெசேஜ் அனுப்புவதன் மூலம் சிலிண்டர் புக்காகிவிடும். இதில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

சிலிண்டர் முறைகேடு
அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது நவம்பர் 1 ஆம் தேதி முதல் செயலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்களை அறிந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

OTP கட்டாயம்
இனி எல்பிஜி சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் OTP கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஆதென்டிகேஷன் கோட் (Delivery Authentication code) எனப்படும் DAC என்ற புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளது.

ஓடிபி எண் கூறுவது கட்டாயம்
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியரிடம் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை கூறினால் மட்டும் இனி சிலிண்டர் வழங்கப்படும்.

கேஸ் சிலிண்டர் முறைகேடு
நவம்பர் 1 ஆம் தேதி முதல் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஓடிபி எண் கட்டாயம். இந்த புதிய நடைமுறையானது கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்கள் அறிந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

மொபைல் எண்ணை உடனடியாக அப்டேட் செய்யுங்கள்
எல்பிஜி சிலிண்டர்களின் நுகர்வோர் எரிவாயு ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்ட தங்களது மொபைல் எண்ணை நீங்கள் மாற்றியிருந்தால் அதை உடனடியாக அப்டேட் செய்துவிடுங்கள். அப்படி செய்யாத பட்சத்தில் தங்களுக்கு ஓடிபி எண் கிடைக்காது, இதன்மூலம் சிலிண்டர் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.

DAC எனப்படும் புதிய நடைமுறை
முதற்கட்டமாக DAC எனப்படும் புதிய நடைமுறை நாடுமுழுவதும் உள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த புதிய நடைமுறை படிப்படியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த சிலிண்டர் DAC முறை வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எல்பிஜி சிலிண்டர்கள் மானியம்
அதேபோல் எல்பிஜி சிலிண்டர்கள் மானியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. வீட்டிற்கு சிலிண்டர்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும்.

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியம்
அதன்பின் அரசு தரப்பில் இருந்து மானியத் தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்படும். இந்த நடைமுறையும் சிலிண்டர் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்
சிலிண்டர் மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதன் மூலம் முறைகேடாக சிலிணடர்கள் விற்கப்படுவது குறைந்துவிட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் பெறலாம்.

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என்ற அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் சிலிண்டர் மானியம் வழங்கப்பட மாட்டாது. இந்த நடவடிக்கையின் மூலம் சிலிண்டர் போலி விற்பனை குறைந்துள்ளது எனவே கருதப்படுகிறது.

அமேசான் மூலம் சிலிண்டர் முன்பதிவு
அதேபோல் அமேசான் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்மூலம் எச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் அமேசான் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
source: dnaindia.com


Click it and Unblock the Notifications