Home
News

ஆகஸ்ட் 16க்குள் இந்த வேலையை முடிக்கவும்.. இல்லையெனில் LPG சிலிண்டர் பெறுவதில் சிக்கல்!

வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் கேஸ் சிலிண்டர் தொடர்பான இந்த அப்டேட்டை அனைவரும் கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதைச் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் கேஸ் சிலிண்டர் சேவையைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் அன்றாட சமையலுக்கான முக்கிய எரிபொருளாக எல்பிஜி கேஸ் சிலிண்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் மூலம், எல்பிஜி இணைப்புகள் நாட்டின் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் உள்ள குடும்பங்களுக்குச் சென்றடைந்து.

LPG  சிலிண்டர்.. ஆகஸ்ட் 16க்குள் இந்த வேலையை முடிக்கவும்..

சில மாதங்களுக்கு முன்பு ஈரான் போர் காரணமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அரசு சில புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இந்நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும் தங்கள் ஆதார் எண்ணை கேஷ் இணைப்புடன் இணைக்கும் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை விரைவாக முடிக்க வேண்டும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி கேஸ் இணைப்புகளைக் கண்டறிந்து, தகுதியான நுகர்வோருக்கே சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிபார்ப்பை முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கேஸ் விநியோக நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் விரைவில் e-KYC-ஐ முடிக்குமாறு எஸ்எம்எஸ் மூலம் தொடர்ந்து நினைவூட்டல் அனுப்பி வருகின்றன.

கேஸ் சிலிண்டர் விநியோகத்தை வெளிப்படையாக நடத்தவும், போலி இணைப்புகளை நீக்கவும் ஆதார் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சரிபார்ப்பை முடிக்க ஆகஸ்ட் 16 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் e-KYC-ஐ முடிக்காத நுகர்வோருக்கு கேஸ் சிலிண்டர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். சிலருக்கு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எல்பிஜி கேஸ் சிலிண்டரை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பெற விரும்பினால், ஆதார் e-KYC சரிபார்ப்பை விரைவில் முடித்துவிடுவது நல்லது. இதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் எளிதாக செய்து முடிக்கலாம்.

ஆன்லைனில் e-KYC செய்ய விரும்புபவர்கள், தாங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனமான IOCL, BPCL அல்லது HPCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும். அங்கு e-KYC அல்லது Aadhaar KYC என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் OTP உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.

ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று e-KYC சரிபார்ப்பை முடிக்கலாம். அங்கு பயோமெட்ரிக் (கைரேகை) சரிபார்ப்பு அல்லது தேவையான ஆவணங்களை வழங்கி இந்த செயல்முறையை நிறைவு செய்யலாம்.

LPG  சிலிண்டர்.. ஆகஸ்ட் 16க்குள் இந்த வேலையை முடிக்கவும்..

கேஸ் ஏஜென்சிக்கு செல்லும்போது, கேஸ் இணைப்பு புத்தகம் (அல்லது நுகர்வோர் எண்) மற்றும் ஆதார் அட்டை போன்ற தேவையான ஆவணங்களைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் e-KYC செயல்முறை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.

கேஸ் ஏஜென்சியில் e-KYC சரிபார்ப்பை மேற்கொள்ள எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது முற்றிலும் இலவச சேவையாகும். ஆகஸ்ட் 16 வரை கால அவகாசம் இருப்பதால் தாமதிக்காமல், முடிந்தவரை விரைவில் e-KYC-ஐ நிறைவு செய்வது இறுதி நேர சிரமங்களையும் சிலிண்டர் பெறுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் தவிர்க்க உதவும்.

Best Mobiles in India

English summary
LPG Customers Urged to Complete Aadhaar e-KYC Before August 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X