புது LPG கேஸ் விதிகள்.. இனி 25 நாட்கள் போதும்.. என்னென்ன மாறுது? இதோ முழு விவரம்..
தற்போது கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு சிலிண்டரை பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டரை பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
முன்னதாக ஈரான்-அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் காரணமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிவாயுவின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதாவது வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களாகவும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட காலம் நிறைவடைவதற்கு முன்பாக புதிய சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாத வகையில் நடைமுறை அமலில் இருந்தது.
தற்போது எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற நுகர்வோருக்கான முன்பதிவு கால இடைவெளியும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிராமப்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களும் இனிமேல் 25 நாட்கள் இடைவெளியில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதுவரை இருந்த காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளதால், தேவையான நேரத்தில் சிலிண்டரை மீண்டும் பதிவு செய்வதற்கான வசதி கிராமப்புற மக்களுக்கு கிடைத்துள்ளது. எல்பிஜி விநியோகத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையை அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் தாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் கிராமப்புற நுகர்வோர் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் ஏற்பட்டிருந்த கால இடைவெளி குறைக்கப்பட்டு, அவர்களின் தேவைக்கு ஏற்ப எரிவாயுவை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசு அறிவித்துள்ள இந்த மாற்றம் நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய திட்டம்
சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் அதிகமான வீடுகளுக்கு PNG வசதியைக் கொண்டு செல்வதுடன், குழாய்வழி எரிவாயு பயன்பாட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் சுமார் 1.74 கோடி வீட்டு PNG இணைப்புகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய பகுதிகளுக்கும் PNG குழாய்வழி எரிவாயு வசதி விரிவுபடுத்தப்படும். மேலும், தற்போது பயன்படுத்தப்படாமல் அல்லது கட்டணம் செலுத்தப்படாமல் உள்ள இணைப்புகளையும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
