புது ரூல்ஸ்.. லோயர் பெர்த்தில் செக்.. வயதானோருக்கு முன்னுரிமை.. மற்ற பயணிகள் முன்பதிவு.. ரயில்வே விளக்கம்!
டிக்கெட் புக்கிங் செய்யும்போது, மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் ஒதுக்கீடு (Senior Citizens Lower Berth Reservation) செய்வதற்கான புதிய விதியை இந்திய ரயில்வே (Indian Railways) அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகளால், மற்ற பயணிகளால் லோயர் பெர்த் முன்பதிவை செய்ய முடியுமா?
இல்லை, முதலில் புக் செய்பவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்குமா? அல்லது பெர்த் முன்பதிவு செய்யாமலேயே டிக்கெட் மட்டும் புக் செய்யப்படும்போது, லோயர் பெர்த் யாருக்கு ஒதுக்கப்படும்? என்று பல்வேறு கேள்விகள் ரயில் பயணிகளிடையே எழுந்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு புதிய விதிகளை இந்திய ரயில்வே அடிக்கடி அமல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்களின் வசதியை மேம்படுத்த லோயர் பெர்த் விதிகளில் (Lower Berth Rules) மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஏனென்றால், மூத்த குடிமக்கள் லோயர் பெர்த்தை முன் பதிவு செய்திருந்தாலும், பல நேரங்களில் அவர்களுக்கு அப்பர் அல்லது மிடில் பெர்த் கிடைத்து விடுகிறது.
இதனால், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே லோயர் பெர்த் விதிகளை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. ஆனால், இதிலும் பல்வேறு குழப்பங்கள் ரயில் பயணிகளுக்கு இடையே இப்போது எழுந்துள்ளது.
மூத்த குடிமக்களை தவிர மற்றவர்கள் லோயர் பேத்தை முன்பதிவு செய்ய முடியாதா என்னும் கேள்வியே அதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதற்கு இந்திய ரயில்வே தெளிவான விளக்கம் அளித்துள்ளது. அதில், மூத்த குடிமக்கள் டிக்கெட் புக்கிங் செய்யும் போது லோயர் பெர்த் விருப்பத்தை கட்டாயம் தேர்வு செய்திருக்க வேண்டும்.

முதலில் புக்கிங் செய்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பொது ஒதுக்கீட்டின் கீழ் தானாகவே பெர்த்கள் ஒதுக்கப்படும் போது, மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் (Train Ticket Examiner) முறையிட்டு லோயர் பெர்த்தை பெற்று கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆகவே, அனைத்து ரயில் பயணிகளுக்கும், லோயர் பெர்த் முன்பதிவு பெற உரிமை இருக்கிறது. லோயர் பெர்த்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், முன்கூட்டியே பயணிகள் தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவை ஒதுக்கப்படும். அனைத்து லோயர் பெர்த் களும் முன்பதிவு செய்யப்பட்ட பின், மூத்த குடிமக்கள் அதைக் கேட்டு உரிமை கோர முடியாது.
எனவே, முதலில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு இந்த புதிய விதி எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. ஆனால், பொது ஒதுக்கீட்டின் கீழ் எந்த விருப்பத்தையும் கொடுக்காமல், லோயர் பெர்த் அல்லது அப்பர் பெர்த் என்று எதைப் பெற்றிருந்தாலும், அதை மூத்த குடிமக்கள் பெற்றுக்கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.இதை ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் அவர்கள் முறையிட்டு பெற்றுக் கொள்ள முடியும்.
இது போன்ற பொது ஒதுக்கீட்டின்போது பெரும்பாலும் லோயர் பெர்த்களை மூத்த குடிமக்களுக்கு கொடுக்கவே இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகிறது. ஆகவே, இந்த புதிய விதிகள் மூத்த குடிமக்களின் ரயில் பயணத்தை எளிதாக்குவதுடன் அவர்களிடையே நல்ல வரவேற்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications