வாரி கொடுக்கும் ஜியோ.. OTT.. 2GB டேட்டா, அன்லிமிடெட் சலுகைகள்.. பட்ஜெட் விலை திட்டங்கள்.. யார் விடுவா?
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஓடிடி எனப் பல்வேறு சிறப்பான சலுகைகளை வழங்குவது ஜியோ நிறுவனம் தான்.
அதேபோல் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் சந்தா மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ஜியோவின் இரண்டு திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 3 ஃபேமலி சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ளாலாம். அதற்கு கூடுதலாக ரூ 99 கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி இணைக்கும் சிம் கார்டுக்கு 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம். மேலும் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) இலவச சந்தா கிடைக்கிறது. பின்பு இந்த போஸ்ட்பெயிட் திட்டத்தில் ஜியோசினிமா, ஜியோ டிவி, ஜியோகிளவுட் ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இந்த போஸ்ட்பெஸ்ட் திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.
குறிப்பாக கம்மி பட்ஜெட்-இல் நெட்பிளிக்ஸ் சந்தா, அதிக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் தேவைப்படும் பயனர்கள் ஜியோவின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் ( extra free data) கிடைக்கும். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக கம்மி விலையில் அதிக நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும். 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சந்தாவை வழங்குகிறது ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications








