அசரடிக்கும் ஹேண்ட் பேக்! உப்பு துகளைவிட சின்னது! வாங்கிய விலை இருக்கே! யார் வாங்குனா தெரியுமா?
எவ்வளோ பெரிய பிராண்ட் ஹேண்ட் பேக் வாங்கினாலும், அதனுடைய விலையை பொறுத்தவரையில் மிஞ்சி போனால், லட்ச ரூபாய் இருக்கலாம். இந்த விலைக்கேற்ப அதில் ஏதாவது விசேஷம் இருக்கும். அந்த வகையில், உப்பு துகளைவிட மிகச் சிறிய ஹேண்ட் பேக் ஒன்று, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏலம் போய் இருக்கிறது.
இவ்வவு சிறிய ஹேண்ட் பேக்கை எப்படி செய்ய முடிந்தது. அது ஏன் அவ்வளவு லட்சங்களை வாரி கொட்டி வாங்கப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் பலர் ஆடைகள் முதல் கேட்ஜெட் வரையில் எது வாங்கினாலும், அதை பிராண்ட் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கும் பழக்கம் இருக்கும்.

ஆனால், அதன் விலையை கேட்டால், தலையே சுற்றிவிடும். இதுவா இவ்வளவு விலை? என்பது போல கேட்க தோன்றும். சில நேரங்களில், அவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்களை பார்த்தால், பொறாமையாக இருக்கும். அதேவேளையில், அவர்களுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று கூட தோன்றலாம்.
ஏனென்றால், அந்த பொருள்கள் பயன்படுத்தக்கூட முடியாமல், பெயருக்கு மட்டுமே வாங்கி வைத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால், அதற்கும் மிகுந்த மதிப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில், ஒரு உப்பு துகளைவிட மிகச்சிறிய ஹேண்ட் பேக் ஒன்று, ரூ.34 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மிஸ்செஃப் (MSCHF) என்னும் நிறுவனம், தொழில்நுட்பமும், கலைத்துவமும் மிக்க பொருள்களை உருவாக்குவது, வாங்கி விற்பது உள்ளிட்டவைக்கு மிகப் பிரபலமானது. மனித ரத்தம் கலந்த ஷூ, பெட்ரோல் வாசனை கொண்ட பர்பியூம் போன்ற விசித்திரமான ப்ராடெக்ட்களை ஏலம் விட்டு நல்ல காசு பார்த்துள்ளது.
இதில் எந்த பொருள்களும் ரூ.25 லட்சத்துக்கு குறைவான விலைக்கு ஏலம் எடுக்கப்படுவதில்லை. அப்படி, இந்த ஹேண்ட் பேக்கும் மிகப்பெரிய விலைக்கு ஏலம் போய் இருக்கிறது. இந்த ஹேண்ட் பேக்கில் லூயிஸ் வுட்டான் (Louis Vuitton) என்ற மிகப்பெரும் ஹேண்ட் பேக் பிராண்டின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதை போட்டோபாலிமர் ரிசின் (Photopolymer Resin) என்னும் பிசின் மூலம் உருவாக்கி உள்ளனர்.
இதனை வடிமைக்க 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர். இவ்வளவு சிறிய ஹேண்ட் பேக்கை எளிதாக பார்த்துவிட முடியாது. அதற்கு, நம்மிடம் மைக்ரோஸ்கோப் இருக்க வேண்டும். இதனாலேயே இது, மைக்ரோஸ்கோபிக் ஹேண்ட் பேக் (Microscopic Handbag) என்றழைக்கப்படுகிறது. இந்த பேக்கை வாங்கிவரின் விவரம் குறித்த தகவலை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
இருப்பினும், அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபர் அதை வாங்கியிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








