Home
News

ஆடிப்போன மார்க்கெட்.. வெளிவந்தது Louis Vuitton இயர்பட்ஸ்.. விலை இவ்வளவு அதிகமா? இதை யார் வாங்க போறீங்க?

உலகமெங்கும் புகழ்பெற்ற லக்சரி ப்ராண்ட்களில் (Luxury Brand) ஒன்று தான் லூயி விட்டான் (Louis Vuitton). இந்த லூயி விட்டான் ப்ராண்ட் பொதுவாக அதன் பேக் மற்றும் வாலட்களுக்கு புகழ்பெற்றது. ஆனால், நிறுவனம் இப்போது அதன் TWS இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.

ஆம், லூயி விட்டான் (Louis Vuitton) பிராண்ட் இப்போது, புதிய அறிமுகமாக ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை, அதன் லக்ஸரி ஸ்டைல் வடிவத்தில், கண்கவர் டிசைன் உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் TWS பயன்படுத்துகின்றனர்.

ஆடிப்போன மார்க்கெட்.. வெளிவந்தது Louis Vuitton இயர்பட்ஸ்.. விலை என்ன?

பொழுதுபோக்கில் ஆரம்பித்து அலுவலக வேலைகள் வரை அனைத்திற்கும் இவை இப்போது பயன்படுத்தப்பட்டு வருக்கின்றன. இதன் பயன்பாடு அதிகரிப்பதாலேயே தேவைக்கு ஏற்றவாறு பலவகையான அம்சங்களுடன் இயர்பட்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முன்னணி இ-கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள் (Apple), சோனி (Sony), சாம்சங் (Samsung) போன்றவை தங்களது சொந்த இயர்பட்ஸ்களை தயாரித்து மக்கள் பயன்பாட்டிருக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

லூயி விட்டானின் ஹாரிசான் லைட் அப் இயர்போன்ஸ் (Louis Vuitton Horizon Light Up Earphones):

இதற்கு அடுத்தகட்டமாக லக்சரி ப்ராண்டான லூயி விட்டானும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. ஆம், லூயி விட்டான் தனது தயாரிப்பில் இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள லூயி விட்டானின் ஹாரிசான் லைட் அப் (Louis Vuitton Horizon Light Up) இயர்போன்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

அன்று முதல் இதன் கண்கவர் டிசைன் அனைவரையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. லைட் வெயிட் ட்ராவல் கேஸுடன் (Light-weight travel case) வரும் இந்த இயர்போன்ஸ் பெல்ட் அல்லது பேக்-ல் சுலபமாக மாட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹாரிசான் லைட் அப் இயர்போன்ஸின் சார்ஜிங் கேஸ் டம்பூர் ஹாரிசான் லைட் அப் (Tambour Horizon Light Up) வாட்சின் சாயலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இது வண்ணமயமாக, க்ரியேட்டிவாக (creative) இருப்பதுடன் சேர்த்து, பயனர்களுக்கு பயன்படும் வகையில் புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபேஷன் மற்றும் ஆடியோ இரண்டையும் இணைக்கும் விதத்தில் இந்த இயர்போன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று லூயி விட்டான் தங்கள் இணையதளத்தில் இந்த இயர்போன்ஸ் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

ஆடிப்போன மார்க்கெட்.. வெளிவந்தது Louis Vuitton இயர்பட்ஸ்.. விலை என்ன?

இது ரெட் (Red), ப்ளூ (Blue), பிளாக் (Black), கோல்டன் (Golden) மற்றும் சில்வர் (Silver) என்று ஐந்து நிறங்களில் வருகிறது. இந்த ஹாரிசான் லைட் அப் இயர்போன்ஸ் லேசாக வளைந்த ஓரங்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அலுமியம் ஃப்ரேமில் பாளிஷ் செய்த ஷஃபையர் லேயர் (Polished Sapphire layer) மேல் லூயி விட்டானின் பிரத்தியேக ப்ராண்ட் ஐகானான மோனோக்ராம் ஃப்லவர் பேட்டர்ன் (Monogram flower pattern) பதிக்கப்பட்டுள்ளது.

பாளிஷ் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சார்ஜிங் கேஸில் (Stainless steel charging case) ப்ராண்ட் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸின் மூடி ப்ளாக் க்ளாஸால் (Black glass) உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல்புறத்தில் வட்ட வடிவத்தில் மோனோக்ராம் ஃப்லவர் பேட்டர்ன் பதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சார்ஜ் ஆகும்போது அந்த பேட்டர்னில் ஒளி தோன்றுமாம்.

நாம் பொதுவாக பயன்படுத்தும் மற்ற இயன்போன்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் இந்த ஹாரிசான் லைட் அப் இயர்போன்ஸில் உள்ளது. அதுதான் ப்ளூடூத் மல்டிபாய்ன்ட் (Bluetooth multipoint). இந்த அம்சம் மூலம் ஒரே சமத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட டிவைஸ்களில் இந்த இயர்போன்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் ரிடெக்‌ஷன் (Active noise reduction) மற்றும் இன்டக்ரேடட் மைக்ரோபோனும் (Integrated Microphone) உள்ளது.

லூயி விட்டானின் ஹாரிசான் லைட் அப் விலை(Louis Vuitton Horizon Light Up Price):

இப்படி பல்வேறு கவர்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஹாரிசான் லைட் அப் இயர்போன்ஸின் விலை என்னவென்று கேட்டால் நீங்கள் ஆடிப்போவிடுவீர்கள். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 1.38 லட்சம் ஆகும். ஆம், 1,38,000 விலையை இதன் மதிப்பு தாண்டுகிறது. உங்களில் யாராவது இந்த இயர்போன்ஸை வாங்க ஆசைப்படுகிறீர்களா? அல்லது உங்கள் நம்பரிடம் இதை கிஃபிட்டாக வழங்கும்படி கேட்கப்போகிறீர்களா? என்று கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Louis Vuitton Horizon Light Up Earphones Costs Around Rs 1.38 Lakh Goes Viral On Internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X