Home
News

உங்களது PAN Card தொலைந்துவிட்டதா? மறுபடியும் விண்ணப்பித்து பெறுவது எப்படி? வாங்க பார்ப்போம்.!

ஆதார் போன்று பான் கார்டும் ஒரு முக்கியமான அரசு ஆவணமாக கருதப்படுகிறது. அரசாங்க சலுகைகளை பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறிப்பாக இன்று பான்கார்டு இன்றியமையாத ஆவணமாக மாறிவிட்டது என்பது தான் உண்மை.

மேலும் நீங்கள் வங்கிக் கணக்கு தொடங்க விரும்பினாலும் அல்லது வேறு வேலை செய்ய விரும்பினாலும் பான் கார்டு கண்டிப்பாகத் தேவைப்படும். அதேபோல் இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல வருமான வரி, பண மோசடிகளைக் கண்டறிதல் போன்ற பல விஷயங்களுக்குப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PAN Card தொலைந்துவிட்டதா? மறுபடியும் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது உங்களது பான் கார்டு தொலைந்துவிட்டால் உடனே புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை. அதே பான் கார்டை மீண்டும் அச்சடித்து தர விண்ணப்பித்தால் போதுமானது. அதாவது உங்களது பான் கார்டு தொலைந்துவிட்டால், நகல் பான் கார்டை எப்படி பெறுவது என்று பதற வேண்டாம். இதை எளிதாக பெற்றுக்கொள்ள அரசு ஒரு ஏற்பாடு செய்துள்ளது. இதன் வழிமுறைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

முதலில் TIN-NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும். அடுத்து மறுபிரின்ட் (Reprint of PAN) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்பு அடுத்த பக்கத்தில் பான் கார்டு எண், மொபைல் எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும் என்பது குறிப்பிடத்தக்கது.

PAN Card தொலைந்துவிட்டதா? மறுபடியும் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

வழிமுறை-2

அதன்பின்பு ஆதார் தரவுகளை பான் கார்டு தரவுகளுடன் சரி பார்க்கவும். பின்பு ஆதார் தரவுகளைப் பயன்படுத்தவும் அனுமதி கோரப்படும். அதற்கு சம்மதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டுச் சமர்ப்பி என்பதை அழுத்தவும். அடுத்து உங்களுடைய ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கும், மெயில் ஐடிக்கும் ஓடிபி அனுப்பப்படும். அதை உள்ளிட்டதும் அடுத்து பக்கத்திற்கு செல்லும்.

வழிமுறை-3

அடுத்த பக்கத்தில் உங்களுக்கு பான் கார்டு நகல் அட்டை வடிவத்தில் வேண்டுமா அல்லது இ-பான் கார்டு வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வு செய்துவிட்டு, சமர்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து நீங்கள் பணம் செலுத்தும் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நெட் பேங்கிங், டெபிட்ஃகிரெடிட் கார்டு அல்லது டிமாண்ட் டிராஃபட் மூலம் ரூ.50 செலுத்த வேண்டும்.

PAN Card தொலைந்துவிட்டதா? மறுபடியும் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

வழிமுறை-4

மேலும் வருமான வரித் துறையிடம் உள்ள உங்களது சமீபத்திய விவரங்களின்படி தொடர்பு முகவரிக்கு பான் அட்டை அனுப்பப்படும். அதேபோல் இந்தியாவை விட்டு வெளியே உள்ள இந்தியர்கள் பான் கார்டு நகல் பெற விரும்பினால் அவர்களுக்குக் கட்டணமாக ரூ.959 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

PAN Card தொலைந்துவிட்டதா? மறுபடியும் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

குறிப்பாக இவை அனைத்தும் முடிந்ததும், உங்கள் எண்ணிற்கு இ-பான் கார்டு தரவிறக்கம் செய்து கொள்ள லிங்க் அனுப்பப்படும். இதுதவிர 15 வேலை நாட்களுக்குள் பான் கார்டு வீடு தேடி வரும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lost your PAN card? How to Apply Online for Duplicate or E-Pan Card? Simple tips! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X