Home
News

ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? டூப்ளிகேட் ஆதார் பெறுவது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்!

ஆதார் கார்டு (Aadhaar Card) இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதுவும் இந்த ஆதார் கார்டை முகவரி சான்றாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர நம்முடைய வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு, எல்பிஜி சிலிண்டருக்கான மானியம், ஸ்காலர்ஷிப் என பல்வேறு நலத்திட்டங்களிலும் ஆதார் எண்ணானது இணைக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக பணம் மற்றும் வங்கி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் என்பதால் அதை நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பின்பு ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அப்டேட் செய்வது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? டூப்ளிகேட் ஆதார் பெறுவது எப்படி?

அதேபோல் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருப்பட்டாலோ நீங்கள் என்ன செய்வீர்கள். இதற்குக் கவலைப்படத் தேவையில்லை. அதாவது நீங்கள் எளிதாக நகல் ஆதார் கார்டை (டூப்ளிகேட் ஆதார் கார்டு) வாங்கிக் கொள்ளலாம். அதுவும் ஆன்லைன் மற்றும் ஆஃபலைன் மூலம் நகல் ஆதார் கார்டை பெறலாம். சரி இதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

ஆஃப்லைன்: நீங்கள் ஆதார் கார்டைத் தொலைத்துவிட்டால் முதலில் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் டூப்ளிகேட் ஆதார் கார்டை பெறமுடியும். இதற்காக அங்கு ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில் பெயர், பாலினம், மாவட்டம், பின் குறியீடு போன்ற பிற தகவல்களை வழங்க வேண்டும்.

அதன்பின்பு டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவதற்கு உங்களுடைய கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் எடுக்கப்படும். இது எல்லாம் முடிந்ததும் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு டூப்ளிகேட் ஆதார் கார்டு வழங்கப்படும். குறிப்பாக இதற்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போதும் உங்களது ஆதார் எண் நினைவில் இருந்தால் ஆதார் எண் தெரியும் என்றால் UIDAI இணையதளம் அல்லது mAadhaar ஆப் மூலம் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இப்போது ஆன்லைனில் மூலம் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

myaadhaar.uidai.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும். அடுத்து download aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். குறிப்பாக உங்களது ஆதார் நம்பரை பதிவிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். அதன்பின்பு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அதை இங்கே பதிவிட்டு Submit கொடுக்க வேண்டும்.

அதன்பின்னர் உடனே உங்களுடைய இ-ஆதார் கார்டு பிடிஎப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படும். அதை நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

அதேபோல் mAadhaar செயலி மூலம் ஆதார் கார்டை நீங்கள் வாங்க முடியும். அதற்கு முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் தளத்தில் mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடுத்து அந்த ஆப்பில் உள்நுழைந்து ஆதார் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்யவும். அதன்பின்னர் My Aadhaar எனும் விருப்பம் இருக்கும். அதில் சென்று டவுன்லோடு ஆதார் கார்டு என்பதை தேர்வு செய்யவும். உடனே மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதை பதிவிட்டு submit கொடுத்தால் போதும் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lost your Aadhaar card? How to get a duplicate Aadhaar? Simple steps!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X