கையில் மதுகிளாஸ், செல்போனுடன் சிவன் ஸ்டிக்கர்: இன்ஸ்டாகிராம் மீது குவியும் கண்டனம்!

|

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையாகும். இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாக இருந்து வருகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்கள் அறிமுகமான வண்ணம் இருக்கும்.

முக்கிய பயன்பாடாக இருக்கும் ஸ்டிக்கர் சேவை

முக்கிய பயன்பாடாக இருக்கும் ஸ்டிக்கர் சேவை

சமூகவலைதளங்களில் பல தளங்களில் ஸ்டிக்கர் சேவை பயன்பாட்டில் இருக்கிறது. பல சேவைகளில் ஸ்டிக்கர் பிரதானமாகவும் இருக்கிறது. ஸ்டிக்கர் சேவை பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இநத ஸ்டிக்கர் அம்சத்தில் அவ்வப்போது விவகாரம் வெடிப்பது வழக்கம். அதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கர் பிரிவில் உள்ள ஸ்டிக்கர் விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடவுள் சிவனை சித்தரித்து கார்டூன்

கடவுள் சிவனை சித்தரித்து கார்டூன்

அதில் இந்தியா உட்பட பல பகுதிகளில் கடவுளாக வழிப்பட்டு வரும் சிவனின் ஒரு கையில் மதுபானம் மறுகையில் செல்போன் இருக்கும் ஸ்டிக்கர் ஆகும். இன்ஸ்டாகிராமின் ஸ்டிக்கர் பகுதியில் சிவன் என்று தேடினால், சிவன் கார்ட்டூன் ஒரு கையில் மதுபானம் மற்றொரு கையில் செல்போன் உடன் தோன்றுகிறது. இதை பார்த்த பலர் இன்ஸ்டாகிராம் மத உணர்வை புண்படுத்துகிறது என கண்டனம் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம் மீது வழக்கு

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டெல்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்து சமூகத்தை பின்பற்றுபவர்களை தூண்டும் ஒரே நோக்கத்தோடு ஜிஐஎஃப் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் இது ஒற்றுமை, வெறுப்பு, பகை ஆகிய நோக்கத்துடன் இருக்கிறது எனவும் பாஜக தலைவர் மணீஷ் சிங் கூறினார்.

மோசமான வடிவமைப்பில் சித்தரித்ததாக குற்றச்சாட்டு

மோசமான வடிவமைப்பில் சித்தரித்ததாக குற்றச்சாட்டு

சிவனை மோசமான வடிவமைப்பில் சித்தரித்ததாக பாஜக தலைவர் இன்ஸ்டாகிராம் மீது புகார் அளித்தார். புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற தெரு காவால்நிலையத்தில் இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இன்ஸ்டாகிராம் பிற அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற பாஜக தலைவர் சிங் தனது புகாரில், சிவன் ஏராளமானோரால் வழங்கப்படுபவர் இந்துக்களின் உயர்ந்த கடவுளாக இருப்பவர் என குறிப்பிட்டார்.

உச்சக் கடவுளான சிவன்

உச்சக் கடவுளான சிவன்

மேலும் உச்சக் கடவுளான சிவனை ஒரு கையில் கிளாஸ் ஒயின் மற்றும் மறுபுறம் ஒருகையில் செல்போன் வைத்திருக்கும் வகையில் சித்தரித்து இருப்பது கண்டனத்துக்குரியது என குற்றம் சாட்டினார். சிவனை மோசமான வகையில் சித்தரித்து இருப்பது வேண்டும் என்றே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். மேலும் இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரி, இன்ஸ்டாகிராம் பிற அதிகாரிள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் சமர்பித்தார்.

இந்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு சட்டம்

இந்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு சட்டம்

மறுபுறம் இந்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு சட்டம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது.

பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

புதிய சமூக ஊடக விதிகள்

புதிய சமூக ஊடக விதிகள்

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் ஆகியவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lord Shiva With Wine and Mobile Phone: Case File Against Instagram Sticker

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X