Home
News

பாக்க அப்படியே OnePlus மாதிரில இருக்கு! ஆனா இது அது இல்லை! மார்க்கெட்டை கலக்கும் புது Oppo போன்!

பார்ப்பதற்கு சமீபத்திய ஒன்பிளஸ் (OnePlus) சாயலில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் ஒன்பிளஸ் உடையது அல்ல.. இது ஒப்போ (Oppo) பிராண்டிற்கு சொந்தமான புதிய Oppo Find X6 சீரிஸ் உடையது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன்களின் விபரத்தை பார்க்கலாம் வாங்க.

ஒப்போ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 ப்ரோ (Oppo Find X6 Pro), ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 (Oppo Find X6) மற்றும் ஒப்போ பேட் 2 (Oppo Pad 2) போன்ற மூன்று புதிய சாதனங்களை இப்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 சீரிஸ், மீண்டும் ஹாசல்பிளாட் பிராண்டட் கேமராக்களை கொண்டுள்ளது. இதே கேமராக்கள் ஒன்பிளஸிலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்க அப்படியே OnePlus மாதிரில இருக்கு! ஆனா இது அது இல்லை!

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 6.82' இன்ச் கர்வுட் E6 AMOLED LTPO 2.0 ProXDR டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1440 x 3168 பிக்சல்கள் கொண்ட Quad HD+ தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைக் கொண்டுள்ளது. இதில் 240Hz டச் சாம்பிளிங், DCI-P3 கலர் ஸ்பேஸின் 100% கவரேஜ், HDR10+ மற்றும் 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. கேமரா பற்றி பேசுகையில், இது OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் (f/1.75) 1-இன்ச் Sony IMX989 பிரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் (f/2.2) IMX890 அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டுள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் உடன் வருகிறது.

இந்த கேமராவை ஹாசல்பிளாட் ட்யூனிங் செய்துள்ளது. செல்ஃபிக்களுக்காக, முன்பக்கத்தில் உள்ள பஞ்ச்-ஹோலில் 32 மெகாபிக்சல் IMX709 கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் Snapdragon 8 Gen 2 SoC உடன் வருகிறது. இது 16ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 100W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

பாக்க அப்படியே OnePlus மாதிரில இருக்கு! ஆனா இது அது இல்லை!

கூடுதல் அம்சங்களில் டபுள் டயாபிராம் அடாப்டிவ் சவுண்ட் ஃபீல்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார் ஆகியவை அடங்கும். இதை சார்ஜ் செய்ய USB-C போர்ட் உள்ளது. மற்ற இணைப்பு அம்சங்களில் Wi-Fi 7, ப்ளூடூத் 5.3, 5G, GPS மற்றும் NFC போன்றவை இதில் உள்ளது.

Oppo Find X6 Pro-வின் விலை CNY 5,999 ஆகும். இந்திய மத்தியில் இது தோராயமாக ரூ. 72,100 மட்டுமே. இதன் 16GB + 256GB மாடல் விலை CNY 6,499 ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 78,100ஆகும். இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் தோராயமாக ரூ. 84,100 விலையில் வருகிறது. இது க்ரீன், பிளாக், சில்வர் மற்றும் பர்பிள் வண்ணங்களின் கலவையில் கிடைக்கிறது.

Oppo Find X6 விலை பற்றி பேசுகையில், இதன் 12GB + 256GB மாடல் CNY 4,499 ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 54,000 விலையில் வருகிறது. இதன் 16GB + 512GB மாடல் CNY 4,999 ஆகும். இதன் தோராயமாக இந்திய விலை ரூ. 60,100 மட்டுமே. இது க்ரீன், கோல்டு, பிளாக் வண்ணங்களில் வருகிறது. இந்தியாவில் இந்த சாதனம் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looks like OnePlus But This Is New Oppo Find X6 Pro Smartphone With Hasselblad Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X