இந்த பட்ஜெட்ல இப்படி ஒரு 50-inch 4K TV-ஆ! வாய் பிளக்க வைக்கும் OnePlus!

|

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, "மக்கள் தான் ஒரு பிராண்ட்-ஐ உருவாக்குகிறார்கள்" என்கிற கருத்துக்கு நீங்கள் உடன்படாமல் போய் இருக்கலாம்.

ஆனால் தற்போதயை நிலைமை அப்படி இல்லை - கையில் ஐபோன், மணிக்கட்டில் ஆப்பிள் வாட்ச், பையில் மேக்புக், வீட்டில் ஆப்பிள் டிவிக்கான அணுகல் என மக்கள், தங்களை தாங்களே ஒரு பிராண்ட் ஆக்கிக்கொண்டு வலம் வருகிறார்கள்.

நம்பிக்கை.. அது தானே எல்லாம்; அதில் மாற்றுக்கருத்து இல்லை!

நம்பிக்கை.. அது தானே எல்லாம்; அதில் மாற்றுக்கருத்து இல்லை!

அதாவது உங்களில் சிலர் ஒரே பிராண்டின் கீழ் வாங்கிய தயாரிப்புகளை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டு இருப்பீர்கள்.

அதாவது உங்கள் வீட்டில் சாம்சங் ப்ரிட்ஜ் இருக்கும், சாம்சங் வாஷிங் மெஷின் இருக்கும், சாம்சங் ஸ்மார்ட்போன் இருக்கும், சாம்சங் ஹெட்செட் இருக்கும், சாம்சங் டிவி இருக்கும், சாம்சங் வாட்ச் இருக்கும்.

இது முழுக்க முழுக்க ஒரு பிராண்டின் மீதான நம்பிக்கையால் உருவாகும் பழக்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதே சமயம் இப்படியாகத்தான் மக்கள் தங்களை தாங்களே ஒரு பிராண்ட்டுக்குள் அடக்கி, "அவங்க வாங்குனா... சாம்சங் பொருட்கள் தான்பா வாங்குவாங்க!" என்று ஒரு பிராண்ட் ஆகவே உருமாறி விடுகிறார்கள் என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது

அப்படியாக நீங்களொரு ஒன்பிளஸ் பிரியர் என்றால்..?

அப்படியாக நீங்களொரு ஒன்பிளஸ் பிரியர் என்றால்..?

நீங்கள் வாங்கினால் ஒன்பிளஸ் பிராண்டட் பொருட்களை / தயாரிப்புகளை தான் வாங்குவீர்கள்; வாங்கிக்கொண்டு இருக்கீர்கள் என்றால், அந்த லிஸ்டில் ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியையும் சேர்க்க விரும்புகிறீர்கள் என்றால், அவசரப்பட்டு வேற எந்த ஒன்பிளஸ் டிவி மாடலையும் வாங்கி விடாதீர்கள்.

ஏனெனில் ஒன்பிளஸ் நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி மாடலை, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதென்ன மாடல்? எப்போது அறிமுகம் ஆகும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!

அறிமுகத்திற்கு ரெடியான ஒன்பிளஸின் அடுத்த ஸ்மார்ட் டிவி!

அறிமுகத்திற்கு ரெடியான ஒன்பிளஸின் அடுத்த ஸ்மார்ட் டிவி!

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஏப்ரல் மாதத்தில், 4கே யுஎச்டி டிஸ்பிளே மற்றும் காமா எஞ்சின் உடன் ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ (OnePlus TV 43 Y1S Pro) மாடல் இந்தியாவில் அறிமுகமானது, அதை தொடர்ந்து இந்​​நிறுவனம் புதிய ஒன்பிளஸ் டிவி 50 ஒய்1எஸ் ப்ரோ (OnePlus TV 50 Y1S Pro) என்கிற மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இது தொடர்பான டீசர்கள், நிறுவனத்தின் சோஷியல் மீடியா சேனல்கள் மற்றும் இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் வெளியாகி உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிசைன், டிஸ்பிளே, ஆடியோ - எப்படி இருக்கும்?

டிசைன், டிஸ்பிளே, ஆடியோ - எப்படி இருக்கும்?

ஒன்பிளஸின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது அதன் முன்னோடிகளைப் போலவே, 4கே UHD டிஸ்ப்ளேவுடன் கூடிய பெசல்-லெஸ் டிசைனை கொண்டிருக்கும்.

மேலும் இது HDR10 சப்போர்ட், Motion Estimation Motion Compensation (MEMC) சப்போர்ட் மற்றும் டால்பி ஆடியோ சப்போர்ட் (20W ஸ்பீக்கர்ஸ்) போன்றவைகளையும் பேக் செய்யும்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, OnePlus TV 50 Y1S Pro ஆனது 10-பிட் கலர் டெப்த் உடனான 50-இன்ச் 4கே யுஎச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் ரியல்-டைமில் படத்தின் தரத்தை மேம்படுத்தும் காமா எஞ்சினும் உள்ளடக்கம்.

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி - எப்படி இருக்கும்?

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி - எப்படி இருக்கும்?

முந்தைய ஒன்பிளஸ் ஒய்-சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களைப் போலவே, வரவிருக்கும் டிவியிலும் ஸ்மார்ட் மேனேஜர் (Smart Manager) இருக்கும், இது சிஸ்டம் ஸ்பீட் மற்றும் ஃப்ரீயிங் அப் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் (Freeing up storage space) உள்ளிட்ட பல செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனுமதிக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி, மற்ற ஒன்பிளஸ் டிவைஸ்களுடன் கனெக்ட் ஆகும் திறனையும் கொண்டுள்ளது. இதன் கீழ் நீங்கள் ஸ்மார்ட் வால்யூம் கன்ட்ரோல் வழியாக ஒரு ஒன்பிளஸ் வாட்ச்-ஐ பயன்படுத்தி டிவியின் சவுண்ட்-ஐ சரிசெய்ய முடியும்.

இந்த புதிய ஸ்மார்ட் டிவி, 8ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் பேக் செய்யும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஸ்பெக்ஸ் லிஸ்ட்' பரிந்துரைக்கிறது.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

கிடைக்கப்பெற்ற எல்லா தகவல்களும், ஒருபக்கம் இருக்க, ஸ்லீப் டிடெக்ஷன் (Sleep Detection) அம்சத்துடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அல்லது விலை விவரங்களை பற்றி ஒன்பிளஸ் நிறுவனம் "வாயை திறக்கவே இல்லை".

இருப்பினும், இந்நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ மாடலின் விலையை வைத்து பார்க்கும் போது (அதாவது ரூ.28,999), வரவிருக்கும் 50-இன்ச் மாடல் ஆனது இதை விட சற்றே அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று நம்புவதில் எந்த தவறும் இல்லை.

ஒருவேளை இது ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டால், கண்டிப்பாக இதுவொரு "தாறுமாறான" 50 இன்ச் டிவி ஆக இருக்கும்!

Photo Courtesy: OnePlus

Most Read Articles
Best Mobiles in India

English summary
Looking for New 50 inch 4K Display Smart TV OnePlus TV 50 Y1S Pro all set to launch in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X