ரூ.10,000 பட்ஜெட்ல இப்படி ஒரு 5G போன்-ஆ! என்ன மாடல்? எப்போ அறிமுகம்?

|

சாம்சங் மற்றும் சியோமி, ரியல்மி போன்ற தென் கொரிய மற்றும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் மத்தியிலும் ஒரு இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட் தாக்குப்பிடித்து, நீடித்து வருகிறது என்றால் அது ஒரு சாதாரணமான விடயம் அல்ல.

ஒன்று - குறிப்பிட்ட நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் "இன்னமும்" நம்புகிறார்கள் என்று அர்த்தம்; அல்லது அது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும்படியான நல்ல ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது என்று அர்த்தம். அப்படியான ஒரு நிறுவனம் தான் - லாவா (Lava)!

லாவாவின் அடுத்த குறி - பட்ஜெட் விலையில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்!

லாவாவின் அடுத்த குறி - பட்ஜெட் விலையில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்!

லாவா, ரூ.10,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அது லாவா பிளேஸ் (Lava Blaze) என்கிற பெயரின் கீழ் வெளிவரவுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம், அதே சமயம் இது விலையை மீறிய சில சுவாரஸ்யமான அம்சங்களை பேக் செய்யும் என்பது போலும் தெரிகிறது.

பட்ஜெட் விலை மட்டுமல்ல.. டோர்-ஸ்டேப் ரிப்பேர் சர்வீஸும் கிடைக்குமாம்!

பட்ஜெட் விலை மட்டுமல்ல.. டோர்-ஸ்டேப் ரிப்பேர் சர்வீஸும் கிடைக்குமாம்!

இந்த ஸ்மார்ட்போன் பற்றி லாவா இன்டர்நேஷனலின் தலைவரும், நிறுவனத்தின் வணிகத் தலைவருமான சுனில் ரெய்னா, பிடிஐ-யிடம் கூறுகையில், லாவா நிறுவனம் பிளேஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ரூ.10,000 என்கிற விலை நிர்ணயத்திற்குள் கொண்டு வரும்.

மேலும், லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனின் வாடிக்கையாளர்கள், டோர்-ஸ்டேப் ரிப்பேர் சர்வீசையும், அதாவது வீட்டிற்கே வந்து பழுதுபார்க்கும் சேவையையும் பெறுவார்கள் என்று கூறி உள்ளார்.

லாவா நிறுவனத்தின் டோர்-ஸ்டேப் ரிப்பேர் சர்வீஸ் எப்படி வேலை செய்யும்?

லாவா நிறுவனத்தின் டோர்-ஸ்டேப் ரிப்பேர் சர்வீஸ் எப்படி வேலை செய்யும்?

சுனில் ரெய்னாவின் கூற்றுப்படி, "எங்களின் அக்னி சீரீஸ் போன்களுக்காக, கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் (customer relationship manager) என்கிற கான்செப்ட்-ஐ நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அது அக்னி மித்ரா என்று அழைக்கப்படுகிறது.

இதன் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சிக்கலையும் கையாள ஒரு பிரத்யேக நபரை ஒதுக்குவோம். இப்போது அதே கான்செப்ட்-ஐ லாவா பிளேஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் நீட்டிக்கப் போகிறோம். இதன் கீழ் இந்தியா முழுவதும் 2,000 நபர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்" என்று கூறி உள்ளார்.

புது Realme Watch வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூன்.23 வரை வெயிட் பண்ணுங்க!புது Realme Watch வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூன்.23 வரை வெயிட் பண்ணுங்க!

பிளேஸ் 5ஜி: டிஸ்பிளே, ப்ராசஸர், பேட்டரி, ரேம் & ஸ்டோரேஜில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

பிளேஸ் 5ஜி: டிஸ்பிளே, ப்ராசஸர், பேட்டரி, ரேம் & ஸ்டோரேஜில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

லாவா பிளேஸ் 5ஜி ஆனது 2460×1080 பிக்சல் ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.78-இன்ச் அளவிலான எல்சிடி பேனலை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடனான யூனிசோக் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவையும் வழங்கலாம்.

சார்ஜிங்கை பொறுத்தவரை இது 30W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்

என்னென்ன கேமராக்களை பேக் செய்யும்?

என்னென்ன கேமராக்களை பேக் செய்யும்?

கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 5G ஆனது 64எம்பி மெயின் கேமரா + 5எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரண்டு 2எம்பி சென்சார்கள் என - அதன் பின்பக்க பேனலில் இரண்டு கட்அவுட்களில் - குவாட்-கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை இதில் 16எம்பி கேமரா இடம்பெறலாம். இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். தவிர லாவா பிளேஸ் 5ஜி ஆனது செக்யூரிட்டிக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர்-பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டிருக்கலாம்.

எப்போது அறிமுகம் ஆகும்?

எப்போது அறிமுகம் ஆகும்?

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது; சரியான தேதி குறித்த தகவல்கள் இல்லை.

மேலும் லாவா நிறுவனமும் அதன் பிளேஸ் 5ஜி மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீடு அல்லது அம்சங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை, எனவே நாம் மேற்கண்ட அம்சங்களை ஒரு மேலோட்டமான தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது.

ஒருவேளை பிளேஸ் 5ஜி மாடலின் அம்சங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், எதிர்பார்க்கப்படும் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. முன்னரே குறிப்பிட்டபடி இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ்தான் வெளியாகும்.

Photo Courtesy, Source: 91Mobiles

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Lava to launch new 5g smartphone under Rs 10000 budget in India soon. Check Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X