பாக்கெட்ல ஓட்டை போடாம 70-80 நாள் வேலிடிட்டி கொடுக்கும் BSNL திட்டங்கள்.. மொத்தம் 3 ஆப்ஷன்ஸ்!
இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான, பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஆனது, அதன் வாடிக்கையாளர்கள் 'மேட்-இன்-இந்தியா' 4ஜி தொழில்நுட்பத்தை அனுபவிக்க உதவும் பலவிதமான திட்டங்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல்-இன் கூற்றுப்படி, சரியான இணைப்பு இருந்தால், ஆன்லைன் வகுப்புகள் முதல் குடும்ப வீடியோ அழைப்புகள் வரை அனைத்தும் மிகவும் சீராக இயங்கும்.
சரியான இணைப்புடன், தற்போதுள்ள பிஎஸ்என்எல் பயனர்களுக்கு சரியான திட்டமும் தேவை. நீங்கள் சுமார் 70-80 நாட்கள் செல்லுபடியாகும் (70-80 Days Validity) ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்களானால், பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு சில அற்புதமான ஆப்ஷன்களை வழங்குகிறது. அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:

1. பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ரூ.439:
பேக் வகை: ரீசார்ஜ், வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம்
முக்கிய நன்மைகள்: ஹோம் LSA-வில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (லோக்கல்/எஸ்டிடி) மற்றும் மும்பை, டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க் உட்பட நேஷனல் மற்றும் 300 எஸ்எம்எஸ்.
செல்லுபடி காலம்: 80 நாட்கள்
ஒரு நாளுக்கான நடைமுறை விலை: தோராயமாக ரூ.5.49
2. பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ரூ.485:
பேக் வகை: ரீசார்ஜ், டெய்லி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டம்
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (அதிகபட்ச வேகம் ஒரு நாளைக்கு 2ஜிபி வரை), அதன் பிறகு வேகம் 40 kbps ஆக குறைக்கப்படும் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள்
செல்லுபடி காலம்: 72 நாட்கள்
ஒரு நாளுக்கான நடைமுறை விலை: தோராயமாக ரூ.6.74
3. பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ரூ.599:
பேக் வகை: ரீசார்ஜ், அதிக டேட்டா பயன்பாட்டிற்கான ப்ரீபெய்ட் திட்டம்
முக்கிய நன்மைகள்: வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (லோக்கல்/எஸ்டிடி) ஆன்-நெட்/ஆஃப்-நெட் மற்றும் மும்பை, டெல்லி உள்ளிட்ட நேஷனல் ரோமிங், மேலும் அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்ச வேகம் ஒரு நாளைக்கு 3ஜிபி வரை). டெய்லி லிமிட் தீர்ந்த பிறகு, வேகம் 40 kbps ஆக குறைக்கப்படும். கடைசியாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
செல்லுபடி காலம்: 70 நாட்கள்
ஒரு நாளுக்கான நடைமுறை விலை: சுமார் ரூ.8.56
பிஸ்என்எல் நிறுவனத்தின்படி, பிஸ்என்எல்-இன் ரூ.599 திட்டம் ஆனது - ஒரே ஒரு சக்திவாய்ந்த ரீசார்ஜில் இடைவிடாத டேட்டா, வரம்பற்ற உரையாடல்கள் மற்றும் நீண்ட கால செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. "நெட்வொர்க் நமது தேசத்திற்கு சொந்தமானதாக இருக்கும்போது, ஒவ்வொரு இணைப்பும் வேகமானது மட்டுமல்ல... அது நம்பகமானதாகவும் இருக்கிறது. சுதேசி 4ஜி ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு கனவையும், ஒவ்வொரு இந்தியரையும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்துகிறது," என்றும் பிஸ்என்எல் தனது 4ஜி நெட்வொர்க்கின் நன்மைகளை சமூக ஊடக தளங்களில் வலியுறுத்தி கூறியுள்ளது.
OPINION: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குவதை போல பிஸ்என்எல் நிறுவனமானது பல வகையான 84 டேஸ் வேலிடிட்டி பிளான்களை வழங்குவதில்லை. ஆக பிஸ்என்எல் பயனர்கள் கிடைக்கக்கூடிய திட்டங்களில் இருந்து ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பிஸ்என்எல் கொடுக்கும் 4ஜி ஸ்பீடை தொடர்ந்து பெற இதுதான் வழி .
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு பிஸ்என்எல் பயனராக இல்லாவிட்டால், புதிய பயனராக இணைய திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால், கவலைப்பட தேவையில்லை. பிஸ்என்எல்-இன் 'ரூ.1 இலவச சிம்' சலுகை, புதிய பயனர்களுக்கு மே 31, 2026 வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் வெறும் 1 ரூபாய்க்கு, பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications