இனி எதுக்கு.. 32-இன்ச், 43-இன்ச் TV-லாம்.. இவ்ளோ கம்மியா 55-இன்ச் TV கிடைக்கும் போது.. என்ன மாடல்?
"கையை கடிக்கும்" பட்ஜெட் காரணமாக.. பெரும்பாலான மக்கள் 32-இன்ச் டிவி (32-inch TV) அல்லது அதிகபட்சமாக 43-இன்ச் டிவி (43-inch TV) மாடல்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையை அப்படியே தலைக்கீழாய் புரட்டிப்போடும் வேலையை ஒன்றை பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் செய்துள்ளது.
தனது இ-காமர்ஸ் வலைதளத்தில்.. விற்பனையில் சக்கைபோடு போடும் ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீதுஅபார சலுகைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சுவாரசியமாக இந்த பட்டியலில் ஒன்பிளஸ் (OnePlus), ஐஃபால்கான்(iFFALCON ), ப்ளாபங்க்ட் (Blaupunkt) பிராண்ட்டுகளின் ஸ்மார்ட் டிவிகளும் உள்ளன. என்னென்ன டிவிகள் என்னென்ன சலுகை விலைகளில் வாங்க கிடைக்கிறது? இதில் எந்த ஆஃபரை மிஸ் பண்ணவே கூடாது? இதோ விவரங்கள்:

இந்த பட்டியலில் முதலாவதாக இருப்பது - ப்ளாபங்க்ட் 55-இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Blaupunkt 55-inch QLED Ultra HD Smart Google TV) தான். முன்னதாக இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.59,999 க்கு வாங்க கிடைத்தது. ஆனால் தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது 33 சதவீத நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.
இரண்டாவதாக - ஹைசென்ஸ் 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Hisense 55-inch Ultra HD 4K LED Smart Google TV) உள்ளது. முன்னதாக இந்த 55-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியானது ரூ.69,990 க்கு வாங்க கிடைத்தது. தற்போது இது பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.35999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது முழுதாக ரூ.33991 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது.
மூன்றாவதாக - வு க்ளோஎல்இடி 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu GloLED 55-inch Ultra HD 4K LED Smart Google TV) உள்ளது. முன்னதாக இந்த டிவி ரூ.65,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது பிளிப்கார்ட்டில் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதவாது இது 38% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது.
நான்காவதாக - ஐஃபால்கான் யு62 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (iFFALCON U62 55-inch Ultra HD 4K LED Smart Google TV) உள்ளது. முன்னதாக இந்த டிவி ரூ.73,990 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இது முழுதாக 60% தள்ளுபடியை பெற்று பிளிப்கார்ட் வழியாக வெறும் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
கடைசியாக - ஒன்பிளஸ் ஒய்1எஸ் ப்ரோ 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (OnePlus Y1S Pro 55-inch Ultra HD 4K LED Smart Android TV) உள்ளது. இந்த ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.49,999 ஆகும். ஆனால் தற்போது இது பிளிப்கார்ட் வழியாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது 24 சதவீத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 5 மாடல்களில் ஒன்பிளஸ் டிவி மீது கிடைக்கும் சலுகையை தான் நீங்கள் தவறவிடவே கூடாது. ஏனென்றால், இது 24W ஆர்எம்எஸ் அவுட்புட் (RMS output) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) உடனான 2 பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இந்த டிவி குவாட்-கோர் எம்டி9612 ப்ராசஸர் (Quad-core MT9612 Processor) மூலம் இயக்கப்படுகிறது.
பல வகையான ஸ்மார்ட் அம்சங்களுடன் வரும் இந்த டிவியில் 3 எச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி, ப்ளூடூத் மற்றும் பில்ட்-இன் வைஃபை ஆதரவும் உள்ளது. கடைசியாக இந்த டிவியில் நெட்பிளிக்ஸ் (Netflix), யூட்யூப் (YouTube), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட தளங்களுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








