Home
News

இப்போவும் ரூ.200 தான்.. அதிக செலவு இல்லாமல் டெய்லி நன்மைகளை கொடுக்கும் Jio ரீசார்ஜ்கள்!

உண்மைதான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.249 மதிப்புள்ள அதன் பேஸிக் ரீசார்ஜை நீக்கிவிட்டது தான். அதற்காக ஜியோவிடம் பட்ஜெட் விலை திட்டங்களே இல்லை என்று கூறிவிட முடியாது. ரூ.200 க்குள், ரூ.350 க்குள் மற்றும் ரூ.500 க்குள் என எல்லா வகையான பட்ஜெட்டிலும் - பெஸ்ட் பிளான்களை கொண்டுள்ளது.

அப்படியாக இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரூ.200 - ரூ.500 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்ய 3 ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். சுவாரசியமாக இவைகள் எல்லாமே டெய்லி 2 ஜபி திடேட்டாவை வழங்குகின்றன. ஒருவேளை நீங்கள் ஜியோவின் 5ஜி எஸ்ஏ நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால், கூடுதலாக 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.

அதிக செலவு இல்லாமல் டெய்லி நன்மைகளை கொடுக்கும் Jio ரீசார்ஜ்கள்!

1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது எந்தவொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்தும் கிடைக்காத "நாட்டின் மிகவும் மலிவான டெய்லி 2ஜிபி டேட்டா பிளான்" ஆகும்

மேலும் ரூ.200 க்கு குறைவான விலையில் 5ஜி டேட்டாவை வழங்கும் ஒரே திட்டமும் இதுதான். அதாவது இந்த திட்டத்துடன் பயனர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெறுவார்கள். ஆகா ரூ.1998-ன் பயனர்கள் டேட்டா நுகர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை. டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய வழக்கமான நன்மைகளை தவிர்த்து "சொல்லி கொள்ளும்படி" வேறு எந்த கூடுதல் நன்மைகளும் இதில் இல்லை. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 14 நாட்கள் (2 வாரங்கள்) ஆகும்.

2. ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்துடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறுவார்கள். மேலும் இந்தத் திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோக்ளவுட் ஆகிய கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.

மேலும் ஜியோ நிறுவனம் இந்த திட்டத்துடன் ஆண்டுவிழா சலுகை ஒன்றையும் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் ஜியோஃபைனான்ஸ் உடன் கூடுதலாக 2% தங்கம், ஜியோஹோம் 2 மாத இலவச இணைப்பு, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா ஆகிய நன்மைகள் கிடைக்கிறது.

மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.399 தள்ளுபடி (குறைந்தபட்சம் ரூ.1,000 ஆர்டருக்கு ரூ.200 தள்ளுபடி), மூன்று மாத ஜொமாட்டோ கோல்ட், ஒரு மாத ஜியோசாவ்ன், ஆறு மாத நெட்மெட்ஸ் சந்தா, ஈஸ்மைட்ரிப் உள்நாட்டு விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி, மற்றும் ஜியோஏஐகிளவுட் இலவச 50ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய நன்மைகளும் கிடைக்கிறது.

3. ரிலையன்ஸ் ஜியோ ரூ.445 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.445 திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுவிழா சலுகைகள் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.455 திட்டத்தின் பயனர்கள் ஜியோடிவி ஆப் வழியாக சோனி லைவ், ஜீ5, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஃபேன்கோட் மற்றும் ஹோய்சோய் ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாவையும் பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Best Jio 2GB Per Day Plan Under Rs 500 Check Out Rs 198 Rs 349 and Rs 445
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X