Home
News

BSNL-ன் பலே திட்டம்.. ஒரே ஒரு ரீசார்ஜ்.. ஒவ்வொரு மாசமும் 1500GB டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி!

பிராட்பேண்ட் இணைப்பிற்காக (Broadband Connection) நீங்கள் செய்யும் செலவை குறைக்க விரும்பினால், அதே சமயம் உங்களுக்கு கிடைக்கும் இன்டர்நெட் ஸ்பீடை (Internet Speed) அதிகரிக்க விரும்பிபால்.. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பாரத் ஃபைபர் (Bharat Fibre) சேவை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனது பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. மேலும் இந்நிறுவமாம் கடந்த பல ஆண்டுகளாக அதன் ஃபைபர் சேவைகளை வழங்கி வருகிறது; சுவாரசியமாக இது மிகவும் மலிவான விலைக்கு அணுக கிடைக்கிறது.

BSNL-ன் பலே திட்டம்..  ஒவ்வொரு மாசமும் 1500GB டேட்டா!

மேலும் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, அதாவது பட்ஜெட் மற்றும் இன்டர்நெட் ஸ்பீட் ஏற்ப தேர்வு செய்ய ஏராளமான பாரத் ஃபைபர் திட்டங்களும் உள்ளன. அவைகளில் 100 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்கும் ஒரு பிரபலமான திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

நாம் இங்கே பேசுவது ரூ.9324 மதிப்புள்ள பாரத் ஃபைபர் திட்டத்தை பற்றித்தான். இது ஓராண்டுக்கு செல்லுபடியாகும் அதாவது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ஒரு திட்டமாகும். இதன் கீழ் நீங்கள் 100 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை பெறுவீர்கள்.

இந்த திட்டத்தின் டேட்டா லிமிட் ஒரு மாதத்திற்கு 1.5டிபி டேட்டா ஆகும்; அதாவது 1500ஜிபி டேட்டா ஆகும். ஒருவேளை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாதாந்திர டேட்டாவை (Monthly Data Limit) நீங்கள் தீர்த்து விட்டீர்கள் என்றால்.. உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட் 5எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

இலவச ரூட்டருடன் (Free Router) வரும் இந்த இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) நன்மையை வழங்கும் இலவச பிக்ஸட்-லைன் வாய் காலிங் கனெக்னும் (Free fixed-line voice calling connection) கிடைக்கும். இந்த திட்டத்தில் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகள் இணைக்கப்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் இதுவும் ஒருவகையில் நல்லது தான்.

இந்த திட்டத்தின் ஒரு மாத செலவைக் கணக்கிட்டால், அது ரூ.777 ஆக இருக்கும், உண்மையியேயே இது உங்கள் பணத்தை தாறுமாறாக மிச்சப்படுத்தும் ஒரு திட்டமாகும். இருப்பினும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் - ஜிஎஸ்டி தான். ரூ.9324 என்பது ஜிஎஸ்டி சேர்க்கப்படாத விளையாகும்.

இதன் விளைவாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் நிறுவல் கட்டணமான ரூ.500-ஐ தள்ளுபடி செய்துள்ளது போல. ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்துடன் சேர்த்து ஓடிடி நன்மையையும் உங்களுக்கு தேவை என்றால் plus.bsnl.in வழியாக மாதத்திற்கு ரூ.249 செலுத்தி ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகலை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Best Broadband Plan with 100Mbps Speed and 1 Year Validity Check This BSNL Bharat Fibre Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X