Home
News

1 நாள்.. 2 நாள் இல்ல.. மொத்தம் 365 நாட்கள்.. போதும் போதும்ற அளவுக்கு நன்மைகளை கொடுக்கும் 2 Airtel ரீசார்ஜ்!

நீங்களொரு ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளராக இருந்தால்.. ஒரே ஒரு ரீசார்ஜில் ஒரு வருடம் முழுவதும் ஓஹோன்னு நன்மைகளை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) தேடினால்.. அதிலும் குறிப்பாக அது டெய்லி டேட்டாவுடன் வரவேண்டுமென்றால்.. உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லின் கீழ் நீண்ட கால வேலிடிட்டி (Long Validity) உடன் சேர்த்து டெய்லி டேட்டாவையும் வழங்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. நாம் இங்கே பேசுவது ஏர்டெல் ரூ.2,999 மற்றும் ஏர்டெல் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டங்களை பற்றித்தான்.

போதும் போதும்ற அளவுக்கு நன்மைகளை கொடுக்கும் 2 Airtel ரீசார்ஜ்!

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இது 365 நாட்கள் என்கிற நீண்ட வேலிடிட்டி (365 Days Validity) உடன் வருவது மட்டுமின்றி தினமும் 2ஜிபி டேட்டாவையும் (2GB Daily Data) வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தமாக 730ஜிபி டேட்டா கிடைக்கும். இது தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமின்றி, வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) செய்யும் பயனர்களுக்கும் போதுமானதாக இருக்குமென்பதால் சந்தேகமே வேண்டாம்.

2ஜிபி என்கிற டெய்லி டேட்டா லிமிட் முடிந்த பின்னர் 64கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் (Internet Speed) கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். உடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Appollo 24/7 Circle) சேவைகளுக்கான மூன்று மாத இலவச சந்தா, ஃபாஸ்ட்டேக் (FastTag) ரீசார்ஜ் செய்யும் போது ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோட்யூன்ஸ் (HeloTunes) மற்றும் விங்க் ம்யூசிக் (Wynk Music) சந்தா போன்றவைகளும் கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) வழங்குகிறது. இதை பெற நீங்கள் ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் இருக்க வேண்டும்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? ரூ.2,999-ஐ போலவே இதுவும் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் இது 2ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 2.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான (Disney+ Hotstar Mobile) ஒரு வருட சந்தாவும் இலவசமாக கிடைக்கும். இந்த 2 மாற்றங்களை தவிர்த்து, ரூ.3359-ன் மற்ற நன்மைகள் எல்லாமே ரூ.2999 உடன் ஒற்றுப்போகும். அதாவது டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ்ஆக குறைக்கப்படும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், 3 மாத கால இலவா அப்பல்லோ 24/7 சர்க்கிள் சேவை, ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோட்யூன்ஸ் மற்றும் விங்க் ம்யூசிக் சந்தா ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி போன்ற நன்மைகளை கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Best Airtel Prepaid Plan with 365 Days Validity with 2GB Daily Data You Have 2 Options
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X