Vodafone SIM யூசர்களுக்கான பெஸ்ட் 56 நாள் ரீசார்ஜ்னா அது இதுதான்.. 4ஜி, 5ஜி, வாய்ஸ், SMS.. எந்த திட்டம்?
வி (Vi) என்கிற வோடாபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited) நிறுவனத்தின் கீழ் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ஒரு வேல்யூ ஃபோகஸ்டு (Value Focused) ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் 56 நாட்கள் என்கிற சசர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும் பல திட்டங்கள் உள்ளன. ஆனால் வி வழங்கும் இந்த திட்டம் "கொஞ்சம்" கவனிக்கத்தக்கது.
வோடாபோன் ஐடியாவிவானது ஏர்டெல்லை அப்பட்டமாக காப்பி அடிப்பதும், ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் திட்டங்களை போன்றே, அதே விலைக்கு பல திட்டங்கள் வோடாபோன் ஐடியாவிடமும் உள்ளன என்பது நமக்கு தெரியும், நாம் இங்கே பார்க்கும் திட்டத்தின் விலையில் ஏர்டெல்லிடம் ஒரு திட்டம் உள்ளது, ஆனால் வி தான் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது

நாம் இங்கே பேசுவது வி ரூ.579 ப்ரீபெய்ட் பிளானை பற்றித்தான். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது 2ஜிபி தினசரி டேட்டாவை வழங்கவில்லை, ஆனாலும் கூட 5ஜி டேட்டா சலுகையை கொடுக்கிறது. குறிப்பிடத்தக்க வண்ணம் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிட 2 நிறுவனங்களுமே 2ஜிபி அல்லது அதற்கு மேலான டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டங்களில் மட்டுமே 5ஜி டேட்டா ஆபரை கொடுக்கின்ற்ன.
வோடாபோன் ஐடியா ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். டேட்டாவை பொறுத்தவரை, டெய்லி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது 56 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும்
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. ஆனால் இது உண்மையாகவே "வரம்பற்றது: அல்ல. வோடாபோன் ஐடியா நிறுவனமானது அதன் 5ஜி பயனர்களுக்கு ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி டேட்டா என்கிற வரம்பை நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த திட்டத்துடன் பல கூடுதல் டேட்டா சலுகைகளும் உள்ளன.
இதில் பிஞ்ச் ஆல் நைட் சலுகை, வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன், இந்த திட்டத்துடன் வி மூவிஸ் & டிவி ஆப் அணுகலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது, இருப்பினும், 5ஜி நன்மையானது (நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தது) அனைவருக்கும் கிடைக்காமல் போகலாம்.
ஒருவேளை நீங்கள் இதேபோன்ற நன்மைகளை இன்னும் மலிவான விலைக்கு தேடினால்..வோடபோன் ஐடியா ரூ.365 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் ஆனது, இந்த பிரிவில் (சூப்பர் ஹீரோ பிரிவில்) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மலிவான திட்டமாகும். இது அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்கிறது.
கூடுதலாக இதன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பாதி நாளுக்கான இலவச அன்லிமிடெட் டேட்டா (12AM முதல் 12PM வரை), வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா ஆகிய நன்மைகளும் கிடைக்கும். இதே போன்ற நன்மைகள் வி-யின் பெஸ்ட் என்ட்ரி லெவல் பிளான் ஆன ரூ.451-ன் கீழும் கிடைக்கிறது. இதுவும் கிட்டத்தட்ட எல்லா வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








