Home
News

Airtel கஸ்டமர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 3 திட்டங்கள்!

இம்மாத தொடக்கத்தில் அமலுக்கு வந்த விலை உயர்விற்கு பின்னர்.. பல வகையான விலைகளில் அணுக கிடைத்த திட்டங்கள், தற்போது மிகவும் குறைவான விருப்பங்களின் கீழ் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அப்படியாக பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) கீழ் வெறும் 3 திட்டங்கள் மட்டுமே டெய்லி டேட்டா லிமிட் இல்லாமல் வருகின்றன. அதாவது இந்த திட்டங்களில் - தினமும் இவ்வளவு (1ஜிபி / 2ஜிபி / 3ஜிபி) டேட்டாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற எந்த வரம்பும் இருக்காது.

2024 கட்டண திருத்தத்திற்கு பிறகு இந்த பிரிவில் ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வெறும் 3 விருப்பங்களை மட்டுமே வழங்குகிறது. இந்த 3 திட்டங்களில், இரண்டு திட்டங்கள் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடனும் மற்றும் 1 திட்டம் ஒரு மாத கால வேலிடிட்டியுடன் வருகிறது. அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:

Airtel கஸ்டமர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 3 திட்டங்கள்!

1. ஏர்டெல்லின் 25ஜிபி பல்க் டேட்டா பிளான்: இந்த திட்டத்தின் விலை ரூ.355 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் ட்ரூ அன்லிமிடெட் பிரிவின் கீழ் கிடைக்கும் நுழைவு-நிலை விருப்பமாகும். இது மொத்தம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

அதாவது இந்த திட்டமானது ஒரு நாளைக்கு சுமார் ரூ.12 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கிறது. 25ஜிபி என்கிற டேட்டா ஒதுக்கீட்டை தாண்டிய பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா, இலவச விங்க் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் ம்யூசிக் சந்தாவும் கிடைக்கும்

2. ஏர்டெல் 50ஜிபி நோ டெய்லி டேட்டா லிமிட் பிளான்: இந்த திட்டத்தின் விலை ரூ.589 ஆகும். ஏர்டெல் சேவையின் ட்ரூ அன்லிமிடெட் பிரிவின் கீழ் கிடைக்கும் இந்த திட்டமானது மொத்தம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

அதாவது இந்த திட்டமானது ஒரு நாளைக்கு சுமார் ரூ.20 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கிறது. 50ஜிபி என்கிற டேட்டா ஒதுக்கீட்டை தாண்டிய பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா, இலவச விங்க் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் ம்யூசிக் சந்தாவும் கிடைக்கும்.

3. ஏர்டெல் 60ஜிபி பல்க் டேட்டா பிளான்: இந்த திட்டத்தின் விலை ரூ.609 ஆகும். ஏர்டெல் சேவையின் கீழ், நோ டெய்லி டேட்டா லிமிட் கீழ் கிடைக்கும் கடைசி திட்டமானது மொத்தம் 60 ஜிபி டேட்டா, அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும்.

அதாவது இந்த திட்டமும் ஒரு நாளைக்கு சுமார் ரூ.20 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கிறது. 60ஜிபி என்கிற டேட்டா ஒதுக்கீட்டை தாண்டிய பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். மேலும் இந்த திட்டமும் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா, இலவச விங்க் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் ம்யூசிக் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Airtel No Daily Limit Plan You Have 3 Options Rs 355 Rs 589 Rs 609 Check out Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X