Home
News

BSNL SIM இருக்கா.. ஒரே ரீசார்ஜ்ல 150 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்..டெய்லி 2GB டேட்டா, SMS, வாய்ஸ்!

இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆனது, 150 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலத்தைக் (Service validity) கொண்ட ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் விலை ரூ.1000-க்கும் குறைவு; அதாவது இதன் விலை ரூ. 997 ஆகும்.

இத்திட்டத்தில் தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. வெறும் ரூ.997-க்கு சுமார் 5 மாதங்கள் (150 நாட்கள்) வரை சேவை செல்லுபடியாகும் காலத்தை பெறுவது தற்போதைய சந்தை சூழலில் ஒரு சிறப்பான விஷயமாகும். இந்தியாவில் தொலைத்தொடர்பு நுகர்வோருக்கு கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் தொடர்ந்து மலிவு விலையிலான சேவைகளை வழங்கி வருகிறது.

BSNL SIM இருக்கா.. ஒரே ரீசார்ஜ்ல 150 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்!

இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் ஆனது மற்ற நிறுவனங்களை போல பரவலாக இல்லை; இது வேறு ஒரு விவாதத்திற்குரிய தலைப்பு என்பதால், அதை இப்போதைக்கு தவிர்த்துவிட்டு, நாம் பேசிக்கொண்டிருக்கும் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.997 திட்டம் ஆனது 150 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இத்திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (voice calls) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன.

இத்திட்டம் முதன்மை சிம் கார்டுகளுக்கு (primary SIMs) மட்டுமல்லாமல், இரண்டாம் நிலை சிம் கார்டுகளுக்கும் (secondary SIMs) மிகவும் ஏற்றது. ரூ.997 திட்டத்தின் தினசரி செலவு வெறும் ரூ.6.64 மட்டுமே ஆகும். பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகிய நிறுவனங்கள் வழங்கும் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் மலிவானது.

பிஎஸ்என்எல் -இன் ரூ.997 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய, பயனர்கள் பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பை பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் பிற ஆப்கள் மற்றும் தளங்கள் மூலமாகவும் இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இத்திட்டத்தை பயன்படுத்த உங்களிடம் செயல்பாட்டில் உள்ள (active) சிம் கார்டு இருக்க வேண்டும்.

ரூ. 997 திட்டம் இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் (telecom circles) உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. இதேபோன்ற செல்லுபடியாகும் காலத்தை கொண்ட பிற திட்டங்களுடன் இத்திட்டம் போட்டியிடக்கூடியது என்றாலும், நாட்டின் மிக வலுவான 4ஜி நெட்வொர்க் ஆதரவு இதற்கு இல்லாததே ஒரு பின்னடைவாக உள்ளது.

300 நாள் ரீசார்ஜ்: ரூ,997-ஐ போலவே பிஎஸ்என்எல் ஆனது, மாதாந்திரம் ரூ.150 என்கிற செலவில், 300 நாட்களுக்கு அதாவது 10 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. அது ரூ.1499 மதிப்பிலான ப்ரீபெய்ட் பிளான் ஆகும். இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டம் 300 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (unlimited voice calls), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் 32ஜிபி டேட்டா ஆகியவைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பிட்ட டேட்டா வரம்பு (FUP) தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40 கேபிபிஎஸ் ஆக குறையும். இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு 'பிளான் வவுச்சர்' (plan voucher) என்பதை நினைவில் கொள்க. நிச்சயமாக, அதிக அதிவேக டேட்டாவை வழங்கும் பிற ப்ரீபெய்ட் திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளன.

அவைகளும் நீண்ட கால செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கலாம். சிம் கார்டை செயல்பாட்டில் வைத்திருக்க மட்டும் விரும்பினால், பயனர்கள் மிகக் குறைந்த விலையிலான பிளான் வவுச்சர்கள் மூலமும் ரீசார்ஜ் செய்யலாம்.பிஎஸ்என்எல்-இன் மிகவும் பிரபலமான பிளான் வவுச்சர்களில் இதுவும் ஒன்று என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Looking for 150 days Validity Under Rs 1000 See BSNL Rs 997 Plan With Daily 2GB Data and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X