Subscribe to Gizbot

ஃபேஸ்புக் ஏரியா 404 இதென்ன புது பஞ்சாயத்து??

Written By:

நாள் ஒன்றிற்குப் பல நூறு முறை திறந்து பார்க்கத் தூண்டும் சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது. இண்டர்நெட் உலகில் கூகுள் தேடுபொறி போல் தவிர்க்க முடியாத சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இண்டர்நெட் உலகில் தகவல் தொடர்பை மேம்படுத்தும் பல்வேறு இதர செயலிகளையும், இண்டர்நெட் இணைப்பினை வழங்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தனது தளத்தைப் போன்றே தன் அலுவலகத்தையும் உலகம் வியக்குமளவு பிரம்மாண்டமாகவும், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைத்திருக்கின்றார். ஃபேஸ்புக் அலுவலகம் குறித்து அறிந்திருப்போம், ஆனால் ஃபேஸ்புக் அலுவலகத்தின் புதிய அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஏரியா 404 தெரியுமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கனவு

கனவு

ஃபேஸ்புக் நிறுவனத்தின் 10 ஆண்டு கனவு திட்டம் ஒரு வழியாக நிறைவேறியுள்ளது. மென்லோ பார்க் தலைமையகத்தில் வன்பொருள் சார்ந்த பணிகளை மேற்கொள்ளப் பிரத்தியேக கூடம் உருவாக்குவதே அந்நிறுவனத்தின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

வன்பொருள்

வன்பொருள்

முற்றிலும் மென்பொருள் சார்ந்த வியாபாரம் செய்து வரும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வன்பொருள் கூடம் தேவையா என்றால் ஆம் என்கின்றன ஃபேஸ்புக் அலுவலக வட்டாரங்கள்.

பணி

பணி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சர்வர், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், இண்டர்நெட் வழங்கும் லேஸர் மற்றும் சோலார் டிரோன் போன்ற திட்டங்களுக்கான பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது.

ஏரியா 404

ஏரியா 404

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வன்பொருள் கூடம் 22,000 சதுர அடியில் உருவாக்கப்பட்டு ஏரியா 404 (Area 404) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு துறை தலைவர் ஜே பரிக் தெரிவித்தார்.

பிழை

பிழை

ஃபேஸ்புக் நிறுவனத்தில் வன்பொருள் சார்ந்த பிரச்சனைகளை ஆய்வு செய்ய முறையான கூடம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பொறியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதோடு பணியும் தாமதமானது.

தீர்வு

தீர்வு

பொறியாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மென்லோ பார்க் தலைமையகத்தின் பயனற்று கிடந்த பழைய அறைகளைப் புதுப்பித்து வெள்ளை நிறத்தில் புதிய வன்பொருள் கூடம் உருவாக்கப்பட்டது.

குறியீடு

குறியீடு

பொறியாளர்கள் ஏதேனும் தவறு இழைத்தால் கிடைக்கும் நாட் ஃபவுன்டு "Not Found" பிழை குறியீட்டைத் தழுவியே வன்பொருள் கூடத்தின் பெயர் சூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியா 404

ஏரியா 404

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வன்பொருள் கூடத்தில் விலை உயர்ந்த, மிகப்பெரிய மற்றும் ஆபத்தான இயந்திரங்கள் மற்றும் சில அறைகளும் இருக்கின்றன. இந்த அறைகளில் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் செல்லவும் அனுமதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பணியாளர்களின் பாதுகாப்பு காரணமாகப் பலகட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவற்றில் கூடத்தினுள் தயாராகும் கருவியின் தரம், பாதுகாப்பு மற்றும் சோதனை போன்றவையும் அடங்கும்.

கட்டமைப்பு

கட்டமைப்பு

ஏரியா 404கூடத்திற்கான பணிகள் 9 மாதங்களுக்கு முன் துவங்கி கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. புதிய வன்பொருள் கூடம் இரண்டு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதாக பரிக் தெரிவித்தார்.

நோக்கம்

நோக்கம்

அதன் படி ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல்துறையை சேர்ந்த பொறியாளர்கள் ஒரே இடத்தில் கூடி ஒன்றிணைந்து பணியாற்றுவது மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ரக கேஜெட் மற்றும் தொழில்நுட்ப கருவிகளைச் சோதனை செய்ய ஏரியா 404 உருவாக்கப்பட்டுள்ளது என பரிக் தெரிவித்தார்.

வேகம்

வேகம்

இதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிடும் கருவிகள் முன்பை விட வேகமாக ப்ரோட்டோடைப் போன்று உருவாக்கப்பட்டு விரைவில் தயாரிப்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதோடு 8 டெக் பிரிவு, Internet.org கனெக்டிவிட்டி குழு மற்றும் ஒகுலஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி குழுவினர் ஒரே கூறையின் கீழ் ஒன்றிணைந்து பணியாற்ற முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Look Inside Facebook’s New Secret Lab Tamil

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot