1000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் "இன்று".. எப்போது துவங்குகிறது?எங்கெல்லாம் பார்க்கலாம்

|

1000 வருடங்களில் நிகழ்ந்திடாத வகையில் நீண்ட நேரம் நீடித்து நிகழும் பூமியின் மிக நீண்ட நேரச் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த 2021 ஆம் ஆண்டில் நிகழும் இரண்டாவது சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த 580 ஆண்டுகளில் தோன்றிடாத பகுதி வகை சந்திர கிரகணமாகவும் இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதுவரை 1000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் இது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் எப்போது துவங்கும், எங்கெல்லாம் இதை மக்கள் பார்க்க இயலும் என்ற தகவலைப் பார்க்கலாம்.

பூமியின் மிக நீளமான சந்திர கிரகணம் நிகழும் நாள்

பூமியின் மிக நீளமான சந்திர கிரகணம் நிகழும் நாள் "இன்று"

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது தான் சந்திர கிரகணம் என்ற இந்த நிகழ்வு நிகழ்கிறது. மேலும் சிறிது நேரம் பிந்தையவற்றில் அதன் நிழலை இந்த நிகழ்வு போடச் செய்கிறது. இந்த நிகழ்வின் போது நடைபெறும் பகுதி சந்திர கிரகணத்தின் மொத்த கால அளவு 3 மணி நேரம் 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் ஆகும். இது பார்ட்சியல் எக்லிப்ஸ் (Partial Eclipse) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பார்ட்சியல் எக்லிப்ஸ் என்பது நிலவின் முழு பகுதியில், ஒரு சிறிய பகுதி மட்டும் கிரகணத்தால் மறைக்கப்படாமல் இருப்பதாகும்.

1,000 ஆண்டுகளில் நிகழாத மிக நீளமான சந்திர கிரகணம்

1,000 ஆண்டுகளில் நிகழாத மிக நீளமான சந்திர கிரகணம்

கடந்த 1,000 ஆண்டுகளில் நிகழாத மிக நீளமான சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2021 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாக இந்த நிகழ்வு மாறப்போகிறது. இன்று நிகழும் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இது என்று முன்பே தெரிவித்திருந்தோம், அதேபோல், மிக நீண்ட நேரம் நிகழும் சந்திர கிரகணம் இது என்பதையும் தெரிவித்திருந்தோம். இந்த சந்திர கிரகணத்தின் ஒட்டு மொத்த நிகழ்வு நேரம் என்பது, சுமார் 6 மணி நேரம் மற்றும் 1 நிமிடங்களுக்கு நீடித்து நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

580 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட பகுதி நேரச் சந்திர கிரகணமும் இது தானா?

580 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட பகுதி நேரச் சந்திர கிரகணமும் இது தானா?

இந்த சந்திர கிரகணம் கடந்த 580 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட பகுதி நேரச் சந்திர கிரகணமாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு நீண்ட பகுதி சந்திர கிரகணம், இதற்கு முன்பு பிப்ரவரி 18, 1440 ஆம் ஆண்டு மட்டுமே நிகழ்ந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேபோன்ற, நீண்ட சந்திர கிரகணம் அடுத்து நிகழும் போது நாம் யாருமே அதைப் பார்க்க முடியாது. காரணம் அடுத்த சந்திர கிரகணம் வரும் பிப்ரவரி 8, 2669 ஆம் ஆண்டில் தான் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக்கை பூர்ணிமா ஒரு சிறப்பு நிகழ்வா?

கார்த்திக்கை பூர்ணிமா ஒரு சிறப்பு நிகழ்வா?

சராசரியாகச் சொல்லப்போனால், அடுத்த 648 வருடங்களுக்குப் பிறகு தான் இது மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது. 1,000 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட சந்திர கிரகணம் இதுவாகும். சந்திர கிரகணம் எப்போதும் முழு நிலவு நாளில் நிகழ்கிறது. நவம்பர் 19 அன்று வரும் முழு நிலவான பீவர் நிலவு அல்லது ஃபிராஸ்ட் நிலவு என்று அழைக்கப்படும் நாளில் நிகழ்கிறது. நவம்பரில் வரும் முழு நிலவு இந்தியாவில் கார்த்திக்கை பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்துக்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாகும். இந்த நிகழ்வை மக்கள் தவறவிடாமல் பார்ப்பது சிறப்பானது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

எந்த நேரத்தில் இந்த சந்திர கிரகணம் தோன்றுகிறது? எப்போது இதை பார்க்கலாம்?

எந்த நேரத்தில் இந்த சந்திர கிரகணம் தோன்றுகிறது? எப்போது இதை பார்க்கலாம்?

சரி, இந்த சந்திர கிரகண நிகழ்வு இந்தியாவில் என்ன நேரத்தில் துவங்குகிறது என்று இப்போது பார்க்கலாம், நவம்பர் 19, 2021 அன்று நிகழும் சந்திர கிரகணம் ஆனது இந்திய நேரப்படி சரியாக 12:48 IST க்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 12:48 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகண நிகழ்வு 16:17 IST மணி வரை நீடித்து இறுதியாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் சுமார் 14:34 IST மணி அளவில் உச்சம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூமியின் நிழல் சந்திரனின் 97% பகுதியை மறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

இந்த சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

நவம்பர் 19, 2021 அன்று பீவர் கிரகணத்தின் முழு அத்தியாயத்தையும் பார்க்கச் சிறந்த இடம் வட அமெரிக்கா தான் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சந்திர கிரகணம் பூமியில் உள்ள மற்ற இடங்களிலும் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் இது நன்றாகத் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் எங்கெல்லாம் தெரியும் என்பதை இப்போது பார்க்கலாம்.

இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

இந்திய மக்கள் இந்த சந்திர கிரகணத்தை எங்கெல்லாம் நேரடியாக பார்க்கலாம்?

இந்திய மக்கள் இந்த சந்திர கிரகணத்தை எங்கெல்லாம் நேரடியாக பார்க்கலாம்?

இந்தியாவில், இந்த சந்திர கிரகணத்தை மக்கள், நமது நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருந்து நேரடியாகக் கண்களால் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சிறிய பகுதியினர் கிரகணத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அதேபோல் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இருந்து, கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மட்டுமே மக்கள் நேரடியாகப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்க முடியாத மக்கள் என்ன செய்யலாம்?

சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்க முடியாத மக்கள் என்ன செய்யலாம்?

இந்த கிரகணத்தை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. மற்ற இடங்களில் உள்ள மக்கள் யூடியூப் மூலம் இந்த நிகழ்வை நேரலையில் காணலாம். இது போன்ற சுவாரசியமான செய்திகளுக்கும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொடர்பான தகவல்களுக்கும் எங்கள் கிஸ்பாட் பக்கத்தை பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Longest Lunar Eclipse In Last 1000 Years Is Happening Today How To Watch It In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X