Just In
- 20 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 22 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Movies
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
புது வருடத்தில் சலுகைகளை அள்ளி வீசி குதுகலப்படுத்தும் Airtel, Jio, Vi.! 1 வருடத்திற்குக் கவலை இருக்காது.!
வோடபோன் ஐடியர், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மாதாந்திர திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இந்நிறுவனங்கள் 1 ஆண்டுக்குப் பயன்படும் வகையில் சிறந்த அசத்தலான திட்டங்களை வைத்துள்ளன. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களைத் தான் தற்போது மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

குறிப்பாக இந்த நீண்ட காலத் திட்டங்களைத் தேர்வு செய்யும் போது, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள், அதிக டேட்டா எனப் பல சலுகைகளை வழங்குகிறது இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள். அதேபோல் சில நிறுவனங்கள் புது வருடம் வருவதை முன்னிட்டு சில அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளைக் கூட அறிவித்துள்ளன.

ஜியோ நிறுவனம்
சமீபத்தில் 2023 புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஜியோ நிறுவனம் ரூ.2023 விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய திட்டத்துடன் ரூ.2999 திட்டத்தின் வேலிடிட்டியை கூட நீட்டித்துள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோ ரூ.2023 திட்டம்
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 252 நாட்கள் ஆகும். இந்த புதிய திட்டத்தில் மொத்தமாக 630ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி-ஐ நீட்டித்து இருக்கிறது ஜியோ நிறுவனம். தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டேட்டா ரோல்ஓவர், VI திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. தற்போது இந்த திட்டத்தில் 50ஜிபி கூடுதல் டேட்டா நன்மையும் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.3099 திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திடடத்தில் இலவசமாக 75ஜிபி கூடுதல் டேட்டா நன்மையும் உள்ளது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்ம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதேபோல் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2899 ப்ரிபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல திட்டங்களில் சில அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம்.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். குறிப்பாக நீண்ட கால வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470