Lonar Lake: பிங்க் நிறமாக மாறிய 50,000 ஆண்டு பழமையான லோனார் ஏரி! நிற மாற்றத்திற்கு இதான் காரணம்!

|

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லோனார் பள்ளம் ஏரியின் நீர் மர்மமான முறையில் நிறம் மாறியுள்ளது. புகழ்பெற்ற லோனார் ஏரியின் நீர் இதற்கு முன்பு பச்சை நிறத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் நீர் இப்பொழுது இளஞ்சிவப்பு, அதாவது பிங்க் நிறமாக மாற்றியுள்ளது. இந்த செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் படு வேகமாக வைரல் ஆகிவருகிறது. லோனார் ஏரியின் நிறம் மாறியதற்கு உண்மை காரணம் இதுதான்.

மர்மமான முறையில் நிறம் மாறிய லோனார் ஏரி

மர்மமான முறையில் நிறம் மாறிய லோனார் ஏரி

புல்தானாவில் உள்ள மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லோனார் பள்ளம் ஏரியின் நீர் மர்மமான முறையில் அதன் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றியுள்ளது, இதனால் புதிய கோட்பாடுகளையும், சந்தேகங்களையும் இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஏரியின் நீரின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றம், சராசரியாக சுமார் 1.2 கி.மீ. விதத்திற்கு உருவாக்கியுள்ளது.

பச்சை நிறத்தில் இருந்த நீர் பிங்க் நிறமாக மாறியது

பச்சை நிறத்தில் இருந்த நீர் பிங்க் நிறமாக மாறியது

இந்திய வன அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் இந்த சம்பவம் சற்று குழப்பமடையச் செய்துள்ளது. ஏனெனில், சாதாரண நாட்களில் லோனார் ஏரியின் நீர் எப்பொழுதும் பச்சை நிறத்தில் மட்டும் தான் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், லோனார் ஏரியின் இந்த நிற மாற்றம் சம்பவம் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது என்றும், இது முதல் முறை அல்ல என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த முறை பிங்க் நிறமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளனர்.

BSNL அதிரடி அறிவிப்பு: ரூ.99 திட்டத்தில் திருத்தம்., அன்லிமிட்டெட் கால்!BSNL அதிரடி அறிவிப்பு: ரூ.99 திட்டத்தில் திருத்தம்., அன்லிமிட்டெட் கால்!

சிறுகோள் மோதலால் உருவான லோனார் பள்ளம்

சிறுகோள் மோதலால் உருவான லோனார் பள்ளம்

லோனார் பள்ளம் என்பது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது பூமியின் தாக்கத்துடன் ஒரு சிறுகோள் மோதலால் உருவாக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லோனார் பள்ளம் என்றும் அழைக்கப்படும் இந்த 113 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் ஏரி இந்தியாவின் ஒரு முக்கியமான தனித்துவமான புவியியல் தளம் என்பது பலருக்கும் தெரியப்படாத உண்மை.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னமாக விளங்கும் இந்த ஏரியில் உள்ள நீர் சலைன் நீர் என்றும், இதன் பிஹெச்(PH) அளவு 10.5 இருக்கும் என்றும் லோனார் ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார். சலைன் வாட்டர் என்பது உப்பு நீர் ஆகும். அதேபோல், இந்த நீர்நிலைகளில் அதிகளவில் பாசிகள் உள்ளது. இந்த நிற மாற்றத்திற்கு உப்புத்தன்மை மற்றும் பாசிகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

பிங்க் ஏரிக்கு விங்ஞானிகள் கொடுத்த விளக்கம் இதுதான்

பிங்க் ஏரிக்கு விங்ஞானிகள் கொடுத்த விளக்கம் இதுதான்

லோனார் ஏரியின் நீர் மேற்பரப்பில் ஒரு மீட்டருக்குக் கீழே ஆக்ஸிஜன் அளவு சுத்தமாக இல்லை. லோனார் ஏரிக்கு ஏற்றார் போல ஈரானில் ஒரு ஏரிக்கும் இதே ஒற்றுமை இருக்கிறது. ஈரானில் உள்ள ஏரியின் நீரும் லோனார் ஏரியின் நீரைப் போல பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இதற்கான உண்மை காரணம் இந்த நீரில் அதிமாக உப்புத்தன்மை உள்ளதால், நீரின் நிறம் பிங்க் நிறத்தில் தோற்றம் அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால் லோனார் ஏரியின் நிற மாற்றத்திற்கும் இதுதான் காரணமா?

நீரின் அளவு குறைந்துவிட்டது

நீரின் அளவு குறைந்துவிட்டது

இந்த கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, வனத்துறையினர் நீர் மாதிரி சேகரித்து ஏரியின் நிறம் மாறியதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது லோனார் ஏரியின் நீரின் அளவு தற்போது குறைவாக உள்ளது என்றும், மகாராஷ்டிரா சுற்றுவட்டாரத்தில் போதிய அளவு மழை இல்லாததால் ஏரியில் புதிய தண்ணீர் தேக்கம் ஏற்படவில்லை என்று ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார்.

உப்புத்தன்மை மற்றும் பாசிகளின் இயல்புநிலை மாற்றம்

உப்புத்தன்மை மற்றும் பாசிகளின் இயல்புநிலை மாற்றம்

மழை இல்லாத காரணத்தினால் குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே ஏரியில் உள்ளது. நீரின் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக உப்புத்தன்மை மற்றும் பாசிகளின் இயல்புநிலை மாற்றம் ஏற்படக்கூடும், இதனால், ஏரியின் நீரின் நிற மாற்றம் நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நீரின் நிறம் மாறியது இது முதல் முறை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

சத்தமில்லாமல் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!சத்தமில்லாமல் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

இதுவும் கூட காரணமாக இருக்கலாம்

இதுவும் கூட காரணமாக இருக்கலாம்

அவுரங்காபாத்தின் டாக்டர் புவாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் டாக்டர் மதன் சூர்யவன்ஷி கூறுகையில், ஊரடங்கு கால கட்டத்தின் போது, லோனார் ஏரியின் நீர்நிலை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நிலையாக இருந்த காரணத்தினால் கூட ​​இந்த மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதி

டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதி

சுமார் 383 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் வனவிலங்கு சரணாலயத்தின் பகுதியில் தான் இந்த ஓவல் வடிவ லோனார் ஏரி அமைத்துள்ளது, இது டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதியாக ஜூன் 8, 2000 அன்று அறிவிக்கப்பட்டது.

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம்

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம்

பிரிட்டிஷ் அதிகாரி சி.ஜே.இ அலெக்சாண்டரால் லோனார் ஏரி முதல் முதலில் 1823 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டது, பின்னர் இந்த ஏரி 1979 ஆம் ஆண்டில் இது ஒரு தனித்துவமான புவியியல் தளமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம் என்ற அடையாளத்தையும் பெற்றது.

Best Mobiles in India

English summary
Lonar Lake In Maharashtra Turns Pink Mysteriously : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X