உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?

|

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் தமிழகத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளில் இ-பாஸ் இல்லாமல் பயணித்த பலரை போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று நோய்

கோவிட்-19 தொற்று நோய்

கோவிட்-19 தொற்று நோய் வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்து அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்பொது கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா

இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா

கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சம் தொடும் காலக் கட்டத்தை இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலின் குழு ஆய்வு நடத்தி அறிவித்துள்ளது. இதில் இந்திய பிறக்கப்பட்டிருக்கும் ஊரடங்கானது உச்சத்தை தொடுவதற்கு 34 நாட்களில் இருந்து 74 நாட்களாக தாமதப்படுத்தியுள்ளது.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு

மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு

இந்தியாவில் தற்போதுவரை கொரோனா பாதிப்பு 3,32,424 ஆக அதிகரித்துள்ள நிலையில், 9520 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,000-த்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலைத் தடுக்க பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தற்போது இதிலும் போலி தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலி இ-பாஸ்

போலி இ-பாஸ்

அதேபோல் சென்னையில் இருந்து வேலூர் வரும் வாகனங்களை ராணிப்பேட்டை செக்போஸ்டில் போலீஸார் சோதனை செய்து மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். இதில் பலர் போலி இ-பாஸ் பெற்று பயணிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போலி இ-பாஸ் மூலம் பயணிப்பவர்கள்

போலி இ-பாஸ் மூலம் பயணிப்பவர்கள்

இதையடுத்து போலி இ-பாஸ் மூலம் பயணிப்பவர்களை கண்டித்து போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர். அதேபோல் இதுதொடர்பான விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அகமத் 25 மற்றும் ரகுமான் 29 ஆகியோர் போலி இ-பாஸ் தயாரித்து இமெயில் அனுப்பியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து போலி இ-பாஸ் தயாரித்து பயணம் மேற்கொள்ள வைப்பது கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலி இபாஸ் மூலம் காரில் வந்தவர்கள்

போலி இபாஸ் மூலம் காரில் வந்தவர்கள்

இதில் முன்னதாக 5 பயணிகள் சென்னையில் இருந்து போலி இபாஸ் மூலம் காரில் வந்த ஜெயபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல் அஞ்சுகிராமம் பகுதியில் சுங்கச்சாவடில் 5 பேர் காரில் போலி இ பாஸ் மூலம் பயணித்தது கண்டறியப்பட்டுள்ளது. இதிலும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதி

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதி

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் எல்லைக்குள் வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனை செய்த பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறையினரும் போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னை அம்பத்தூரில் இருந்து வந்த வாகனம் ஒன்றினை போலீஸார் சோதனை செய்தனர்.

சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!

தொடரும் போலி இ-பாஸ் நடவடிக்கை

தொடரும் போலி இ-பாஸ் நடவடிக்கை

அப்போது போலி இ-பாஸ் மூலம் பயணித்தது கண்டறியப்பட்டுள்ளது. காரில் பயணித்தவர்கள் போலி இ-பாஸ் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியதை அடுத்து, காரில் பயணித்த கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
corona lockdown: Fake epass travel increase in tamilnadu- police registered case

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X