மே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு!

|

மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும் அதுவரை சொமேட்டோ, ஸ்விகி போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் செயல்படக்கூடாது எனவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

மளிகை பொருட்கள் விநியோகம்

மளிகை பொருட்கள் விநியோகம்

பல்வேறு நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோகம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் மக்களுக்கு உதவும்படியான இந்தியா முழுவதும் பல நகரங்களில் மளிகை பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக சொமேட்டோ அறிவித்தது.

சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவை

சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவை

கடந்த மாதம் இறுதியில் கேரளா மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவையை செய்யத் தொடங்கியது. சொமேட்டோவை போன்றே அதன் போட்டி நிறுவனமான ஸ்விகியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருள் விநியோகத்தை தொடங்கியது.

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு மளிகை பொருட்கள் விநியோகத்துடன் சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பானது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லெபனான், துருக்கி, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

வெப்பநிலை அனுமதிக்கப்பட்ட 98.4 டிகிரி பாரன்ஹீட்

வெப்பநிலை அனுமதிக்கப்பட்ட 98.4 டிகிரி பாரன்ஹீட்

டெலிவரி ஊழியர்கள் உணவகங்களுக்கு செல்லும்போது சோதனை செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை அனுமதிக்கப்பட்ட 98.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகிலிருந்தால் மட்டுமே டெலிவரி செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போதைக்கு அதிகமாக உணவு டெலிவரி செய்யும் 50% ஊழியர்களின் உடல் வெப்பநிலை மட்டுமே சொமேட்டோ செயலியில் வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

மே மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு

மே மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு

இந்த நிலையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், தங்களது மாநிலத்தில் மே மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறார்.

சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு தடை

சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு தடை

மேலும் வீடுகளுக்கு அனுப்பப்படும் கொரியர் சேவையை ரத்து செய்தும், சொமேட்டோ, ஸ்விகி போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளார். இதுதவிர கண்காணிப்பு பகுதியில் உள்ள மக்கள் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

telanganatoday.com

Best Mobiles in India

English summary
Lockdown extends till may 7 and zomato, swiggy banned in telangana until further notice says cm

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X