தீபாவளி செல்பீ எடுக்க போறீங்களா..? ஒரு நிமிஷம்..!

|

செல்பீ எடுப்பதில் இருக்கும் சந்தோசம் இருக்கே, அடடா..! அதை விவரிக்க வார்த்தையே இல்லை. எவ்ளோ செல்பீ எடுத்தாலும்கூட ஆசை அடங்கவே அடங்காது.

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

அதுவும் தீபாவளி கொண்டாட்டங்கள் ஆங்காங்கே ஆரம்பித்துவிட்ட இந்த நேரத்தில், செல்பீ பற்றி சொல்லவே வேண்டாம். "அப்படி ஒரு செல்பீ எடுக்கணும்", "இப்படி ஒரு செல்பீ எடுக்கணும்" என்று இந்நேரம் ஒரு பெரிய செல்பீ லிஸ்ட் ரெடியாக இருக்குமே..!

ஆணாக மாறிய பெண் - 3 வருடம், 1400 செல்பீக்கள் தான் ஆதாரம்..!

அப்படியாக, உங்கள் தீபாவளி செல்பீக்கள் சும்மா அழகாக இருந்தால் மட்டும் போதுமா என்ன..? செம்ம சூப்பராக இருக்க வேண்டும் அல்லவா..! அப்படியான சூப்பர் செல்பீக்களை மிகவும் 'க்யூட்'டாக எடுப்பது எப்படி என்பதை உங்களுக்கு சொல்லி கொடுக்க தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் காத்திருக்கின்றனர் - செல்பீ மாஸ்டர்கள்..!

முன்னாடி - பின்னாடி :

முன்னாடி - பின்னாடி :

கண்ணாடி முன்னாடி நின்னு செல்பீ எடுக்கும் போது பின்னாடி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஃப்ளாஷ் ஆஃப் :

ஃப்ளாஷ் ஆஃப் :

முன்பக்க கேமிராவை பயன்படுத்தும்போது ஃப்ளாஷ் ஆஃப் செய்ய மறக்க கூடாது. இல்லையென்றால், செல்பீயில் உங்கள் முகம் இப்படிதான் இருக்கும்.

கழுத்து :

கழுத்து :

படுத்துக்கொண்டே செல்பீ எடுக்கும் போது, கழுத்தை இப்படி நேராக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அமுல்பாய் போல் தெரியும்.

போஸ் :

போஸ் :

யார் செல்பீ எடுக்க அழைத்தாலும் உடனே போஸ் கொடுத்து விடக்கூடாது. ஒருவேளை அவர்கள் கையில் இருப்பது 'பிஸ்க்ட்'டாக கூட இருக்கலாம்.

பின்னணி :

பின்னணி :

நாம் அணிந்து இருக்கும் உடையின் நிறமும், பின்னணியும் ஒரே நிறத்தால் இருந்தால் நல்லது.

ரியாக்ஷன் :

ரியாக்ஷன் :

என்ன ரியாக்ஷன் தர போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால் குழப்பமான ரியாக்ஷன் தான் தர நேரிடும்.

அப்பா பிள்ளை :

அப்பா பிள்ளை :

செல்பீயில் அப்பா பிள்ளை போல அல்லது அம்மா பிள்ளை போல காட்டிக்கொள்வது நல்லது.

மாறிவிடுவது :

மாறிவிடுவது :

செல்லப் பிராணிகளுடன் செல்பீ எடுக்கும் போது நீங்களும் ஒரு செல்லப் பிராணியாகவே மாறிவிடுவது இன்னும் சிறப்பு.

நினைக்க வேண்டாம் :

நினைக்க வேண்டாம் :

கண்ணாடி போட்டுக் கொண்டால் கண்களை மூடிக் கொள்ளலாம், செல்பீயில் தெரியாது என்று நினைக்க வேண்டாம்.

கிண்டல் :

கிண்டல் :

செல்பீயில் மிகவும் நல்ல பையன் போல் தன்னை காட்டிக்கொள்ள நினைக்காதீர்கள். மீறி செய்தால் செல்பீ கிண்டல் செய்யும்படியாக தான் இருக்கும்.

அவசியமில்லை :

அவசியமில்லை :

எல்லா செல்பீயிலும் கண்களை திறந்து வித விதமாக முழிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தவிர்த்து விடுங்கள் :

தவிர்த்து விடுங்கள் :

கோபமாக இருக்கும் போது செல்பீ எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

காஸ்ட்யூம் :

காஸ்ட்யூம் :

செல்பீயில் காஸ்ட்யூம் முக்கியம் தான் ஆனால் அது முகத்தை மறைக்க கூடாது.

அனல் பறக்கும் :

அனல் பறக்கும் :

மேட்சிங் மேட்சிங்காக உடை அணிந்து கொண்டு எடுக்கும் செல்பீயில் இன்னும் அனல் பறக்கும்.

ஆர்வ கோளாறு :

ஆர்வ கோளாறு :

செல்பீ எடுக்கும் போது ஆர்வ கோளாறு அறவே கூடாது.

டக் ஃபேஸ் :

டக் ஃபேஸ் :

பாத்ரூமில் மட்டும் தான் டக் ஃபேஸ் செல்பீ எடுக்க வேண்டும் என்று எந்த அவசியமில்லை.

பாவம் :

பாவம் :

என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் செல்பீ எடுப்பது பெரிய பாவம். மேலும் அதை அப்லோட் செய்வது தேச குற்றத்திற்கு சமம்.

போராட வேண்டும் :

போராட வேண்டும் :

எதிர்பார்த்தபடி செல்பீ வரும் வரை போராட வேண்டும். "நம்ம மூஞ்சிக்கு இதுவே போதும்" என்று சலித்துக்கொள்ளவே கூடாது.

தவறு :

தவறு :

தூங்குவது போல் செல்பீ எடுப்பது தவறு ஒன்றுமில்லை ஆனால், அதை "ஸ்லீப்பிங் செல்பீ" என்று போட்டு மாட்டிக்கொண்டால் அது தவறு..!

கூடாது கூடாது :

கூடாது கூடாது :

சாப்பிடும் போது டிவி பார்க்க கூடாது, பேச கூடாது, அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது கூடவே செல்பீயும் எடுக்க கூடாது.

நம்பிக்கை :

நம்பிக்கை :

முதலில் நம்பிக்கை வேண்டும். "அட நம்ம மூஞ்சியா இது..!!!" என்று ரொம்ப வாயை பிளக்க கூடாது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
உங்கள் தீபாவளி செல்பீக்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X