செல்போனுக்கு அடிமையான 14-வயது சிறுமி தற்கொலை: காரணம் என்ன தெரியுமா?

நீண்டநேரம் ஆகியும் அவள் வெளியே வரவில்லை, தாய் குளியல் அறை கதவை தட்டியும் சிறுமி திறக்கவில்லை, இதையடுத்து உதவிகேட்டு தாய் அலறினார்.

|

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் மக்களின் தினசரி வேலையை எளிமையாக்குகிறது என்றுதான் கூறவேண்டும். இருந்தபோதிலும்
ஸ்மார்ட்போன்கள் மூலம் பல்வேறு தீமைகள் உள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் அதிகமான தீமைகள் உள்ளது.

செல்போனுக்கு அடிமையான 14-வயது சிறுமி தற்கொலை: காரணம் என்ன தெரியுமா?

அதன்படி மும்பையை போய்வாடா எனும் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 14-வயது சிறுமி, செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதையும், பின்பு அதை பதிவேற்றம் செய்வதையும் ஒரு பொழுதுபோக்காக செய்யத்தொடங்கினாள்.

முழுநேர வேலை

முழுநேர வேலை

இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அதுவே அவளது முழுநேர வேலையாக மாறியது, எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாகவே அமர்ந்து வீடியோக்களை கண்டு ரசித்துக்கொண்டு இருந்துள்ளார்.

  தாய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது

தாய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது

இந்த செயல்பாடு சிறுமியின் தாய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது, மகளின் தவறை அடிக்கடி கடிந்துகொண்டார், இருப்பினும் சிறுமி தொடர்ந்து அதையே செய்துவந்தாள்.

கடுமையாக சத்தம்போட்டார்

கடுமையாக சத்தம்போட்டார்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி வீடியோவில் மூழ்கி இருப்பதைக் கண்ட தாய் அவளை அக்கம்பக்கத்தினர் பார்க்கும்படி கடுமையாக சத்தம்போட்டார், இதனால் மனமுடைந்த சிறுமி, அழுதபடியே வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.

குளியல் அறை

குளியல் அறை

நீண்டநேரம் ஆகியும் அவள் வெளியே வரவில்லை, தாய் குளியல் அறை கதவை தட்டியும் சிறுமி திறக்கவில்லை, இதையடுத்து உதவிகேட்டு தாய் அலறினார், சத்தம்கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்தனர்.

பரிதமாக உயிரிழந்தாள்

பரிதமாக உயிரிழந்தாள்

அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக அவர்கள், சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமணையில் சேர்த்தனர், அங்கு 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று பரிதமாக உயிரிழந்தாள்.

 சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செல்போனுக்கு அடிமையாகி சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Best Mobiles in India

English summary
Little-girl-suicide-The-cellphone-is-addictive: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X