ரூ.200-க்குள் கிடைக்கும் வோடபோன் ஐடியாவின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சோதனையை செய்து வருகிறது. விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களை விட வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை, பிங்கே ஆல் நைட் சலுகை போன்ற பல
நன்மைகளை வழங்குகிறது. மேலும் இப்போது ரூ.200-க்குள் கிடைக்கும் வோடபோன் ஐடியாவின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப்
பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 200எம்பி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. இருப்பினும், வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் அம்சம் இந்த பேக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். கால் அழைப்பு சார்ந்ததிட்டத்தைத் தேடும் பயனர்களுக்கு, இது ஒரு நல்ல திட்டமாகும்.

வோடபோன் ஐடியா ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். அதேபோல் பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை பெறமுடியும். ஆனால் வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் அம்சம் இந்த பேக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. பின்பு பயனர்கள்
இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Vi Movies மற்றும் TV க்கான அணுகலையும் வழங்குகிறது இந்தரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் Vi Movies மற்றும் TVக்கான அணுகலை
வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications