Home
News

KALKI 2898 AD இந்திய சினிமாவின் VFX புராணம்.. டீ-ஏஜிங்.. மோஷன் கேப்சர்.. டிஜி ஸ்டண்ட் டபுள்.. VFX லிஸ்ட்!

ஹாலிவுட் லெவல்.. ஹாலிவுட் லெவல்.. என்று சொன்னாலும் பல படங்கள் அப்படி இருக்காது. ஆனால், சில நேரங்களில் அது உண்மையாகிவிடும்போது, இந்திய சினிமாவின் விஃஎப்க்ஸ் வளர்ச்சியை நாம் தட்டிக் கொடுத்து வளர்த்துவிட வேண்டியிருக்கிறது. அதைத்தான் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகிய கல்கி 2898 ஏடி படம் செய்திருக்கிறது. இந்திய சினிமாவின் வருங்காலத்துக்கு விஃஎப்க்ஸ் புராணமாக மாறி இருக்கும், இந்த படத்தில் என்னென்ன தொழில்நுட்பங்களை பார்க்க முடிகிறது?

1.மோஷன் கேப்சர் (Motion Capture): நிஜ உலக நடிகர், நடிகைகளின் உடல் அசைவுகளை பதிவு செய்து, அதை கம்யூட்டர் மூலம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்ட இந்த விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் யதார்த்தமான மற்றும் உணர்ச்சிமிக்க காட்சிகளை டிஜிட்டலாக கொண்டுவர முடிகிறது.

KALKI 2898 AD இந்திய சினிமாவின் VFX.. டீ-ஏஜிங்.. மோஷன் கேப்சர் லிஸ்ட்!

இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனின் கதாப்பாத்திரம் இந்த மோஷன் கேப்சர் தொழில்நுப்படத்தின் மூலம் உருவாக்கி இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவரது மிகவும் வயதான தோற்றம் மற்றும் மெலிந்த உடலை பார்க்கையில் அது மேக்கப் செய்யப்பட்டு இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் அவரது முகபாவனங்களில் யதார்த்தத்தை பார்க்க முடிகிறது.

2.டீ-ஏஜிங் (De-aging): அமிதாப் பச்சனின் டீ-ஏஜிங் செய்யப்பட்ட தோற்றம் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அஸ்வத்தாமா கேரக்டர் வயதான தோற்றத்திலும், இளமையான தோன்றத்திலும் பார்க்க முடிகிறது. இந்திய சினிமாவில் வரும் காலங்களில் இந்த டீ-ஏஜிங் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக மாற போகிறது. ஏனென்றால், வரவிருக்கும் கோட் திரைப்படத்தில் டீ-ஏஜிங் செய்யப்பட்ட இளமையான தோன்றத்தில் விஜயின் காட்சிகள் வெளியாகி அந்த தொழில்நுட்பம் கோலிவுட்டில் நுழைந்ததை உறுதிப்படுத்திவிட்டது.

3.ஃபோட்டோகிராமெட்ரி (Photogrammetry): இந்த படத்தில் காசி, காம்ப்ளக்ஸ் மற்றும் ஷம்பாலா போன்ற நகரங்கள் டிஜிட்டலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், முழுவதும் டிஜிட்டலாக்கப்பட்ட நகரங்கள் நிஜ உலகின் தோற்றத்தை கொடுக்காது. ஆகவே, ஆங்காங்கே நிஜ உலக மலைகள், கட்டடங்கள் அல்லது லேண்ட்கேப்ஸ், ஏரியல் வியூ போன்றவற்றை கேமராவில் பதிவு செய்துவிட்டு, அவற்றை 3டி மாடல்களாக மாற்றி டிஜிட்டல் முறையில் மெருகேற்றி திரையில் கொண்டுவருவது, இந்த ஃபோட்டோகிராமெட்ரி மூலம் சாத்தியமாகும். இதை பார்க்க முடிகிறது.

KALKI 2898 AD இந்திய சினிமாவின் VFX.. டீ-ஏஜிங்.. மோஷன் கேப்சர் லிஸ்ட்!

4.டிஜிட்டல் மேட் பெயிண்டிங் (Digital Matte Painting): மிகப்பெரிய நகரங்கள் அல்லது மலைத் தொடர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் போது, அவற்றை மேலும் பிரம்மாண்டமாக மாற்றவோ அல்லது கேரக்டர்கள் இடம்பெற்றிருக்கும் பகுதிக்கு மட்டும் செட் அமைத்துவிட்டு மீதமுள்ள பகுதிகளுக்கு டிஜிட்டல் முறையில் பேங்கிரவுண்ட் கொடுக்கவோ இந்த டிஜிட்டல் மேட் பெயிண்டிங் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கு போர் காட்சிகளில் ஒரு 100 வீரர்களை வரிசையாக நிற்க வைத்துவிட்டு, அவர்களுக்கு பின்னே 1000 வீரர்களை டிஜிட்டலாக வைத்துவிடலாம். பாகுபலியில் இதுபோன்ற பல காட்சிகள் உள்ளன. இதேபோல கல்கி திரைப்படத்தில் சண்டை காட்சிகளை பார்க்க முடிகிறது. ஆகவே, இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக இருக்க வாய்ப்புள்ளது.

5.டிஜிட்டல் ஸ்டண்ட் டபுள் (Digital Stunt Double): இந்த தொழில்நுட்பம் மூலம் மிகவும் ஆபத்தான அல்லது சாத்தியமற்ற சண்டை காட்சிகளை உருவாக்க முடியும். அதாவது, சில ஃபிரேம்களில் மட்டும் நடிகர் அல்லது நடிகையின் உருவங்களை காட்டிவிட்டு, அவர்களின் முகம் தூரத்திலோ அல்லது வேகமாகவே நகரும்போது, அதற்கு டிஜிட்டல் கேரக்டரை திரையில் காட்ட முடியும். இந்த கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் பெரும்பாலான சண்டை காட்சிகள் மற்றும் சில கேரக்டர்களுக்கு ஸ்டண்ட் டபுள் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

6.3டி அனிமேஷன் (3D Animation): இந்த தொழில்நுட்டம் பெரும்பாலான ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். டிஜிட்டல் முறையில் கதாபாத்திரங்கள் மற்றும் பொருட்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எந்திரங்கள், விலங்குகள் போன்ற எந்தவொரு தோற்றத்தையும் கதைக்கு ஏற்ப உருவாக்கி கொள்ளலாம். இந்த கல்கி படத்தில் வரும் ஃபைட்டர் ஜெட்கள், பறக்கும் வாகனங்கள் போன்றவை 3டி அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது. புஜ்ஜி வாகனம் ஆங்காங்கே ரியல்-வேர்ல்டு காட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

KALKI 2898 AD இந்திய சினிமாவின் VFX.. டீ-ஏஜிங்.. மோஷன் கேப்சர் லிஸ்ட்!

7. ஃப்ளூயிட் சிமுலேஷன் (Fluid Simulation): இந்த விஃஎப்க்ஸ் மூலம் நீர், நெருப்பு மற்றும் புகை போன்றவற்றின் இயற்கையான தோற்றங்களை டிஜிட்டலாக உருவாக்க முடியும். இந்த கல்கி படத்தில் வெடித்து சிதறும் வாகனங்கள், கன் ஃபைட், ஆறுகளின் தோற்றம் உள்ளிட்டவை, இந்த ஃப்ளூயிட் சிமுலேஷன் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும்.

8. பார்டிகிள் சிமுலேஷன் (Particle simulation): தூசி, மழை மற்றும் பனி போன்ற பார்டிகிள்களை டிஜிட்டலாக உருவாக்கி திரையில் கொண்டுவர இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. சண்டை காட்சிகளின் போது, உடைந்து சிதறும் கட்டட மற்றும் வாகன துண்டுகள், தூசிகள், புகை மூட்டங்கள், மழை மற்றும் மேக மூட்டங்கள் போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இந்த பார்டிகிள் சிமுலேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.

9. கம்போஸிட்டிங் (Compositing): இந்த விஃஎப்க்ஸ் தொழில்நுட்பம் மூலம் லைவ்-ஆக்சன் காட்சிகளை டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஆப்ஜெக்ட்களோடு இணைத்து அவுட்புட் எடுக்க முடியும். எடுத்துகாட்டாக கல்கி படத்தில் வரும் எதிர்காலத்தின் வாகனங்களை டிஜிட்டலாக உருவாக்கி அதில் உண்மையான நடிகர்களை அமர வைப்பது அல்லது இயக்க செய்வது போன்றவற்றை இந்த தொழில்நுட்பம் மூலம் செய்திருப்பதை பார்க்க முடிகிறது.

மேற்கூறிய விஃஎப்க்ஸ் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல், மேலும் பல தொழில்நுட்பங்கள் கல்கி 2898 ஏடி படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்திய சினிமா ஹாலிவுட் படங்களுக்கு நிகரான விஃஎப்எக்ஸ் தொழில்நுட்பங்களை கொடுப்பத்தில் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதற்கு ஆரம்ப புள்ளியாக பல படங்கள் இருந்தாலும், இந்த கல்கி 2898 ஏடி கேம் சேஞ்சராக இருப்பதை மறுக்க முடியாது.

Best Mobiles in India

English summary
List of VFX Technologies in Kalki 2898 AD Movie, a New Milestone in Indian Cinema's VFX Scenes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X